Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வீரருக்காக போட்டி போடும் சி.எஸ்.கே, கே.கே.ஆர்.. இது அதிரவைக்கும் ஐபிஎல் சண்டை!

சென்னை: ஐபிஎல் பீவர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் தற்போது அணிகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு அணியில் இருந்தும் யாரை கொக்கி போட்டு அணிக்குள் எடுக்கலாம் என்று எல்லோரும் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக சென்ற வருடம் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க ஐபிஎல் அணிகள் முயற்சி செய்து வருகிறது. இதனால் அணிகளுக்கு இடையில் பிரச்சனையும் உருவாகி இருக்கிறது.

தற்போது இங்கிலாந்து வீரர் ஒருவருக்காக சிஎஸ்கே அணியும் கொல்கத்தா அணியும் போட்டிபோட்டு வருகிறது. அவருக்கு இரு அணிகளும் ஏலத்தில் அதிக தொகை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

3 பேர்

3 பேர்

சென்னை அணியிடம் மொத்தம் 5 ரிட்டென்சன் வாய்ப்புகள் இருந்தது. அதில் மொத்த மூன்று வாய்ப்புகளை சென்னை அணி ஏற்கனவே பயன்படுத்திவிட்டது. இதன் மூலம் சென்னை அணி டோணி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை மீண்டும் அணிக்கு எடுத்து இருக்கிறது.

இரண்டு பேர்

இரண்டு பேர்

தற்போது இரண்டு வாய்ப்புகள் சென்னை அணிக்கு இருக்கிறது. இதில் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அஸ்வினை எடுக்க போவதாக டோணி ஏற்கனவே கூறிவிட்டார். மீதம் இருக்கும் ஒரு வாய்ப்பை வைத்து நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குலத்தை அணியில் எடுக்க சென்னை நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

வெளிநாட்டு மோகம்

வெளிநாட்டு மோகம்

தற்போது சென்னை அணியில் டாப் ஆர்டரில் யார் விளையாட போவது என்ற குழப்பம் மட்டும் உருவாகி இருக்கிறது. இதற்கு சென்னை அணி வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்து இருக்கிறது. இதற்கு முன்பு ஹெய்டன், ஹசி , பிராவோ ஆகியோரை அணிக்கு எடுத்தது போல இந்த முறையும் வெளிநாட்டு வீரர்களை அணிக்கு எடுக்கும்.

இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து வீரர்

இதற்காக சென்னை அணி தற்போது ஜேசன் ராய் என்ற இங்கிலாந்து பேட்ஸ்மேனை அணிக்கு எடுக்க முயற்சி செய்கிறது. இவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக இறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் இவருக்கு 10 கோடி வரை சென்னை செலவு செய்யலாம்.

யார்

யார்

இவர் இங்கிலாந்தில் உருவாகி இருக்கும் புதிய பேட்டிங் புயல் ஆவார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 180 ரன் அடித்து தாண்டவம் ஆடினார். அதேபோல் சென்ற வருடம் முழுக்க மிகவும் சிறப்பான ரன் ரேட் வைத்து இருக்கிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

இவர் ஐபில் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அந்த தொடரில் அவர் சரியாகவிளையாடவில்லை . ஆனாலும் இவர் டாப் ஆர்டர் ஐபிஎல் பேட்டிங்கில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டை

சண்டை

தற்போது இவரை கொல்கத்தா அணியும் வாங்க முயற்சி செய்துள்ளது. இவரது குறைந்தபட்ச தொகை ஒரு கோடியாகும். டாப் ஆர்டர் சரியாக இல்லாத காரணத்தால் இவரை அணிக்கு எடுக்க கொல்கத்தா நிறுவனம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

Story first published: Sunday, January 21, 2018, 13:04 [IST]
Other articles published on Jan 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+