சிஎஸ்கே வெயிட்டிங்.... பைனல்ஸ் நுழைய கொல்கத்தா, ஹைதராபாத்துக்கு பைனல் வாய்ப்பு!
Recommended Video

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே நுழைந்துள்ளது. கொல்கத்தாவில் நாளை நடக்கும் பைனல்ஸ் நுழைவதற்கான கடைசி வாய்ப்பான 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவும், ஹைதராபாத்தும் மோத உள்ளன.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே முன்னேறியுள்ளது. முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சிஎஸ்கே 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது.
நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 25 ரன்களில் வென்று பைனல்ஸ் வாய்ப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணியும், எலிமினேட்டரில் வெற்றியடைந்த கொல்கத்தாவும் நாளை நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளன.

27ம் தேதி பைனல்ஸ்
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, 27ம் தேதி மும்பையில் நடக்கும் பைனல்ஸ் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும்

கொல்கத்தா எழுச்சி
தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணி, லீக் ஆட்டங்களில் மாறி மாறி வெற்றி, தோல்வி அடைந்து வந்தது. ஒரு கட்டத்தில் பிளே ஆப் வாய்ப்பு சந்தேகம் என்ற நிலையில் இருந்தது. இருப்பினும் கடைசி மூன்று லீக் ஆட்டங்களிலும் வென்றது. எலிமினேட்டரிலும் வென்றுள்ளது.

ஹைதராபாத் தோல்விகள்
இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருந்து வந்த ஹைதராபாத், முதல் அணியாக பிளே ஆப் முன்னேறியது. ஆனால், லீக் சுற்றில் கடைசி மூன்று ஆட்டங்களிலும், முதல் தகுதிச் சுற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு
பைனல்ஸ் நுழைவதற்கு கடைசி வாய்ப்பாக கொல்கத்தாவில் நாளை இரவு 7 மணிக்கும் நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டம் அமைய உள்ளது. இதில் வெற்றி பெற்று பைனல்ஸ் நுழையப் போவதா கொல்கத்தாவா, ஹைதராபாத்தா?


Click it and Unblock the Notifications