Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2018: முதல் நாள் ஏலத்தில் 78 வீரர்கள் விற்பனை! எந்த அணியிடம் எவ்வளவு பணம் மிச்சமுள்ளது?

பெங்களூர்: ஐபிஎல் 2018ம் ஆண்டுக்கான ஏலத்தின் முதல் நாளில் 78 வீரர்கள் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.அந்த அணிகள் சார்பில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.

ஐபிஎல் விதிமுறைப்படி, ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்கலாம். வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

பெங்களூரில் ஏலம்

பெங்களூரில் ஏலம்

அதன்படி, 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ள நிலையில், இன்று முதல் நாள் ஏலம், காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

முதல் நாளான இன்று, 110 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். அதில் 78 பேர் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். இதில் 49 பேர் இந்திய வீரர்கள், 29 வீரர்கள் வெளிநாட்டினர். இன்றைய நாளில் மொத்தம் ரூ.318.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ராகுல், பாண்டே

ராகுல், பாண்டே

இன்றைய ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிபட்சமாக ரூ.12.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். ராகுல் ரூ.11 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், மணிஷ் பாண்டே அதே விலைக்கு ஹைதராபாத் அணியாலும் வாங்கப்பட்டது.

கெயிலை வாங்க ஆளில்லை

கெயிலை வாங்க ஆளில்லை

அதேநேரம், அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை ஏலத்தில் யாரும் வாங்க முன்வரவில்லை. மார்டின் கப்டில், ஹசிம் ஆம்லா போன்ற பெரிய வீரர்களும் ஏலத்தில் வாங்க ஆளில்லாமல் விடப்பட்டனர்.

பணம் இருப்பு

பணம் இருப்பு

சிஎஸ்கே அணியிடம் ரூ.17 கோடி, டெல்லியிடம் ரூ.12.30 கோடி, பஞ்சாப்பிடம் ரூ.21.90 கோடி, கொல்கத்தாவிடம் ரூ.7.60 கோடியும், மும்பை இந்தியன்ஸ்சிடம் ரூ.15.80 கோடியும், ராஜஸ்தான் ராயல்சிடம் ரூ.23.50 கோடியும், பெங்களூரிடம் ரூ.15.85 கோடியும், ஹைதராபாத்திடம் ரூ.7.95 கோடியும் மிச்சமுள்ளது. இதை நாளை அவர்கள் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, January 27, 2018, 19:37 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+