Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வருஷம் முடிச்சாச்சு.17 போட்டிகளை பார்த்தாச்சு.இப்பதான் முதல் போட்டி.பும்ராவின் புதிய ரெக்கார்ட்!

சென்னை : கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடியனார் ஜஸ்பிரீத் பும்ரா.

அந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, முதல் விக்கெட்டாக ஏபி டீ வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் விளையாடி முதல் விக்கெட்டாக இங்கிலாந்தின் டான் லாரன்ஸ் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

சென்னையில் முதல் போட்டி

சென்னையில் முதல் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளின் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை இங்கிலாந்து எடுத்துள்ளது.

பும்ராவின் முதல் போட்டி

பும்ராவின் முதல் போட்டி

ரவி அஸ்வின் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா அந்த அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வீழ்த்திய முதல் விக்கெட் ஏபி டீ வில்லியர்ஸ்.

பும்ரா முதல் விக்கெட்

பும்ரா முதல் விக்கெட்

தொடர்ந்து அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடியிருந்தாலும் இந்தியாவில் அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய போட்டியின்மூலம் தனது முதல் டெஸ்ட் போட்டியை அவர் விளையாடியுள்ளார். மேலும் உணவு இடைவேளைக்கு முனனதாகவே டான் லாரன்சின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

வெளிநாடுகளில் 17 போட்டிகள்

வெளிநாடுகளில் 17 போட்டிகள்

சரியான நேரத்தில் விராட் கோலி லாரன்சிற்கு எதிராக பும்ராவை களமிறக்கி விக்கெட் விழ காரணமாக அமைந்துள்ளார். கடந்த 2018ல் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய பும்ரா, இந்தியாவில் இன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக 17 போட்டிகளில் வெளிநாடுகளில் இதுவரை விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனை சமன் செய்த பும்ரா

சாதனை சமன் செய்த பும்ரா

இதேபோல மேற்கிந்திய தீவுகளின் வீரர் டாரென் கங்கா 17 டெஸ்ட் போட்டிகளை வெளிநாடுகளில் விளையாடிய பின்பே சொந்த மண்ணில் தனது அறிமுக போட்டியை விளையாடினார். தற்போது இந்த சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். இதேபோல இந்தியாவின் ஜவஹல் ஸ்ரீநாத்தும் சொந்த மண்ணில் தனது அறிமுக போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக 12 போட்டிகளை வெளிநாடுகளில் விளையாடியுள்ளார்.

Story first published: Friday, February 5, 2021, 13:20 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+