Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் பொறி பறக்க போகும் சேப்பாக்கம்.. சென்னைக்கு வரும் ஜாம்பவான் டீம்.. தமிழகத்திற்கு குட் நியூஸ்

சென்னை: இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் மட்டும் கேப்டன் கோலி கலந்து கொள்வார். இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணியில் ரோஹித் சர்மா இணைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

அடுத்த தொடர்

அடுத்த தொடர்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இந்தியா இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும்.

சென்னை

சென்னை

இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.

செம்ம

செம்ம

அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரைய அகமதாபாத்தில் நடக்க உள்ளது. உலகத்திலேயே அதிக மக்கள் அமரும் வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் ஆகும் இது. அதன்பின் புனேவில் 3 ஒருநாளை போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

 சென்னை மீண்டும்

சென்னை மீண்டும்

இதன் காரணமாக சென்னையில் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பின் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. சென்னையில் கடந்த இரண்டு வருடமாக பெரிய அளவில் கிரிக்கெட் தொடர் நடக்காத நிலையில் மீண்டும் சென்னையில் இவ்வளவு பெரிய கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. அதுவும் இங்கிலாந்து போன்ற வலுவான டீம் வருவதால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Thursday, December 10, 2020, 17:25 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+