Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதுக்கு இத்தனை 'அலப்பறை'?... சச்சின் டென்ஷன்!

கொல்கத்தா: தனது 199வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதில் எரிச்சலையே கொடுத்துள்ளதாம்.

பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்டங்கள் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையாம்.

மேலும், அவர்கள் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளும் கூட சச்சினை பெரிய அளவில் கவரவில்லையாம்.

பஸ்ஸை விட்டு இறங்கியதுமே வெடியா..

பஸ்ஸை விட்டு இறங்கியதுமே வெடியா..

பயிற்சிக்காக மைதானத்திற்கு நேற்று சச்சின் வந்தார். அவர் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே பட்டாசுகளை வெடித்துத் தள்ளி விட்டனர். இது சச்சினுக்கு முதல் அப்செட்.

டிரஸ்ஸிங் ரூம் வரை வரிசையா நில்லுங்கப்பா...

டிரஸ்ஸிங் ரூம் வரை வரிசையா நில்லுங்கப்பா...

அடுத்து பஸ்சை விட்டு இறங்கிய இடம் முதல் டிரஸ்ஸிங் ரூம் வரைக்கும் 80 பள்ளிச் சிறார்களை, சச்சின் படம் போட்ட டி சர்ட் அணிய வைத்து வாழ்த்துக் கோஷமிட்டபடி வரிசையாக நிற்க வைத்திருந்தனர். இதுவும் சச்சினுக்குப் பிடிக்கவில்லையாம்.

சிலை வேற...

சிலை வேற...

அத்தோடு நில்லாத பெங்கால் கிரிக்கெட் சங்கம் சச்சினின் பெரிய சைஸ் மெழுகுச் சிலை ஒன்றையும் டிரஸ்ஸிங் ரூம் வாசலுக்கு அருகே நிறுத்தி வைத்திருந்தது. இதையும் சச்சின் பெரிதாக ரசிக்கவில்லையாம்.. சிலையைப் பார்த்து ஒப்புக்கு சிரித்து வைத்தாராம்.

நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா...

நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா...

மேலும் தான் கிரிக்கெட் விளையாட்டை விட மிகப் பெரியவன் அல்ல. அணியின் மொத்த வீரர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்தான் என்றும் சச்சின் கூறியதாக தெரிகிறது.

எதுக்கு இதெல்லாம்

எதுக்கு இதெல்லாம்

மேலும் எதற்காக இத்தனை கொண்டாட்டங்கள் என்றும் அதிருப்தி தெரிவித்தாராம் சச்சின்.

போட்டோ கண்காட்சிக்கு வரலை...

போட்டோ கண்காட்சிக்கு வரலை...

இந்த அதிருப்தி காரணமாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சிக்கும் அவர் போகாமல் ரத்து செய்து விட்டாராம்.

போஸுக்காகவாவது வாங்க பாஸ்...

போஸுக்காகவாவது வாங்க பாஸ்...

இருந்தாலும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தினர் சச்சினை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரை சமாதானப்படுத்திய பின்னரே தனது மெழுகுச் சிலைக்கு அருகே வந்து நின்று போஸ் கொடுத்து விட்டுப் போனாராம் சச்சின்.

Story first published: Tuesday, November 5, 2013, 11:49 [IST]
Other articles published on Nov 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+