Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வாயை மூடிக்கொண்டு உங்க வேலைய பாருங்க”.. இந்திய அணியை மோசமாக விமர்சித்த ஆஸி, சீனியர்.. என்ன ஆனது?

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சேர்ந்தவர்கள் தேவையில்லாத வேலைகளை செய்வதாகவும், வாயை மூடிக்கொண்டு அவர்களின் பணியை மட்டும் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் இயான் செப்பல் விளாசியுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணியினர், 2வது இன்னிங்ஸிலும் 163 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் 76 என்ற குறைந்த இலக்கை டிஃபண்ட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு தோற்றது.

பிட்ச் மீதான சர்ச்சை

பிட்ச் மீதான சர்ச்சை

இந்த தொடர் தொடங்கியது முதல் பிட்ச் குறித்த சர்ச்சை தொடர்ந்துக்கொண்டே தான் உள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளாவது 3வது நாளின் மதிய நேரத்தில் முடிந்தது. ஆனால் 3வது டெஸ்ட் போட்டியோ 3வது நாளின் முதல் செஷனின் போதே முடிந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் விளாசியுள்ளார்.

சரமாரி கேள்விகள்

சரமாரி கேள்விகள்

அதில், இந்தியா எதற்காக பிட்ச்-ஐ உருவாக்குவதில் ஆலோசனைகளை வழங்குகிறார்கள் என்று புரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு சென்று அந்த களத்தில் இந்தியாவால் தொடரை வெல்ல முடிந்ததை மறந்துவிட்டார்களா?. பிட்ச் குரேட்டர் ( வடிவமைப்பாளார் ) செயல்பட வேண்டிய இடத்தில் இந்திய அணி நிர்வாகம், வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் என்ன வேலை? குரேட்டரை அவரது பணியை பார்க்க விடுங்கள். வீரர்கள் விளையாடும் வேலையை மட்டும் பார்த்தால் போதும்.

கருணையே வேண்டாம்

கருணையே வேண்டாம்

அடுத்த போட்டியில் குரேட்டரிடம் சென்று பிட்ச்-ல் மாற்றம் வேண்டும் என கேட்டால், கொஞ்சம் கூட கருணை காட்டாமல், உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்கள் என கூறிவிட வேண்டும். இந்திய அணியினர் வாயை மூடிக்கொண்டு கிரிக்கெட்டை மட்டும ஆடும் வேலையை பார்த்தால் போதும். ஆஸ்திரேலியா வந்த போது பொதுவான பிட்ச்-ஐ உருவாக்கி, அவர்கள் வென்றார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என இயான் சேப்பல் விளாசியுள்ளார்.

ரோகித்தின் பதில்

ரோகித்தின் பதில்

இது ஒருபுறம் இருக்க பிட்ச் சர்ச்சை குறித்து ரோகித் சர்மா பதிலடி தந்துள்ளார். அதில், இதுபோன்ற சுழலுக்கு ஏற்ற களத்தில் ஆடுவது தான் எங்களுக்கு பலம். சொந்த மண்ணில் எது பலமோ அதை செய்யக்கூடிய உரிமை இருக்கிறது. விமர்சிப்பவர்கள் ஏதாவது கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்களை கண்டுக்கொள்ள மாட்டோம். ஏனென்றால் அவர்களெல்லாம் இதுபோன்ற களத்தில் விளையாடிக்கூட இருக்க மாட்டார்கள். பிட்ச் எப்படி இருந்தால் என்ன சரியாக விளையாடுபவருக்கு இங்கு வெற்றி என காட்டமாக தெரிவித்திருந்தார்.

Story first published: Friday, March 3, 2023, 19:29 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+