Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமாரிடம் நேரலையில் மன்னிப்பு கேட்ட ஸ்ரீகாந்த்.. தவறு நடப்பதாக வருத்தம்.. என்ன நடந்தது ?

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 373 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களையும் சுப்மான் கில் 70 ரன்களையும் விளாசி அசத்தினர்.

இந்த நிலையில் இந்தப் போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் ஸ்ரீகாந்த் திடீரென்று சூரியகுமார் யாதவிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்தனர். ஒருவேளை சூரிய குமாரியாதவ், இளம் வீரராக இருந்த போது ஸ்ரீகாந்துக்கு வாய்ப்பு தரவில்லையோ என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்தது.

மன்னிப்பு

மன்னிப்பு

எனினும் தன்னுடைய மன்னிப்புக்கு விளக்கம் அளித்துள்ள ஸ்ரீகாந்த். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த சூரியகுமார் யாதவை இந்திய ஒரு நாள் அணியில் சேர்க்காதது குறித்து ஸ்ரீகாந்த் தன்னுடைய ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் சூரியகுமாருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். அவரிடம் என் மன்னிப்பையும் நான் கேட்டு கொள்கிறேன்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்திய ஒரு நாள் அணியில் சூர்யகுமார் யாதவ் இல்லையா என்று பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியின் டாப் வரிசை வீரர்களை பாருங்கள். இதில் யாராவது எதிரணியிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் இருக்கிறார்களா? எதிரணியிடமிருந்து போட்டியை கவர்ந்து செல்லும் அளவு திறமை உடைய வீரர்கள் இருக்கிறார்களா? என்று ஸ்ரீகாந்த் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

ஏன் இந்த முடிவு

ஏன் இந்த முடிவு

அதே போன்று பிளேயிங் லெவனில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இல்லாதது குறித்தும் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்திருக்க வேண்டும் ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக உள்ள நிலையில் இந்திய அணி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஆல்ரவுண்டர்கள் தேவை

ஆல்ரவுண்டர்கள் தேவை

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் தேவை.அதனை தான் தற்போது இந்தியா தொடர்ந்து தவற விடுகிறது என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்கள் அடித்துள்ளதால் அவரை நீக்க முடியாது என்று இந்திய அணி நிர்வாகம் கூறும் காரணத்தை ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார்.

Story first published: Tuesday, January 10, 2023, 20:13 [IST]
Other articles published on Jan 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+