Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றரை மாத "கேப்".. இப்படி ஒரு "அபத்தமான" டூர் பிளானா? - விளாசிய முன்னாள் இந்திய வீரர்

மும்பை: முன்னாள் இந்திய வீரர் திலீப் வெங்கசர்க்கர் கேட்ட நறுக் கேள்வி ஒன்று, ரசிகர்கள் பலரையும் 'அட.. ஆமாம்-ல' போட வைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட இங்கிலாந்தில் ஒரு 4 மாத சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொள்ளவிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதாவது, ஒரு வருடத்தின் கால் பங்கு நேரத்தை அங்கு செலவிடப் போகிறது.

முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி சவுத்தாம்ப்டனில் ஜூன் 18ம் தேதி தொடங்கும் இப்போட்டி, ஜூன் 22ம் தேதி முடிவடைகிறது. பிறகு, இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

திலீப் வெங்கசர்க்கர்

திலீப் வெங்கசர்க்கர்

இந்த ஒரு டெஸ்ட் தொடர்களுக்கும் இடையேயான கால இடைவெளி ஒன்றரை மாதங்கள். இந்த ஒன்றரை மாத இடைவெளியில் இந்திய அணி அங்கு சும்மாவே இருக்கப் போகிறது. ஆனால், இங்கிலாந்தோ, இந்த கால இடைவெளியில் மேலும் 2 தொடர்களில் விளையாடுகிறது. இதுகுறித்து தான் திலீப் வெங்கசர்க்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன டூர் இது?

என்ன டூர் இது?

இதுகுறித்து அவர் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில், "அந்த ஒன்றரை மாதங்களில் இந்திய வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த தொடரின் திட்டமிடல் குறித்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். என்ன வகையான சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது? முதலில் ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடி, பின்னர் ஒருமாதம் சும்மா இருந்து, பிறகு மீண்டும் எப்படி உங்களால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும்?.

இலங்கை, பாகிஸ்தான்

இலங்கை, பாகிஸ்தான்

ஜூலை மாதத்தில் பாகிஸ்தானும் இலங்கையும் லிமிட்டட் ஓவர்ஸ் தொடருக்காக இங்கிலாந்து செல்கின்றன. இலங்கையுடன் மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து விளையாடுகிறது. அதே போல், பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இங்கிலாந்து விளையாடுகிறது. இந்த இரு அணிகளுடன் விளையாடும் இங்கிலாந்தால், ஏன் இந்தியாவுடன் உடனே டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை?

அது கூட 'டூ மச்'

அது கூட 'டூ மச்'

WTC இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி திரும்பி வந்து திரும்பிச் செல்கிறதா? அந்த ஒன்றரை மாதங்களுக்கு அவர்கள் அப்படி என்ன தான் செய்யப் போகிறார்கள்? அந்த நேரத்தில் கவுண்டி போட்டிகளைத் திட்டமிட்டாலும், ஒன்றரை மாதங்கள் கவுண்டி போட்டிகளில் விளையாடுவது என்பது மிக நீண்ட காலமாகும்.

அபத்தமான டூர்

அபத்தமான டூர்

"இந்த பயணம் விந்தையாக உள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு கிரிக்கெட் இல்லையென்றால் அது உண்மையில் விந்தையானது. இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் இடைவெளியின்றி தொடர்ந்து விளையாட வேண்டும். பாகிஸ்தானும், இலங்கையும் ஏன் இடையில் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வந்து விளையாடுகிறது? இது அபத்தமானது" என்று வெங்சர்க்கர் தெரிவித்தார்.

Story first published: Wednesday, June 2, 2021, 13:34 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+