Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேவிட் பட நாயகியுடன் 8 ஆண்டு காதல்.. உதறிச்சென்ற ஜாகீர் கான்.. கடைசியில் வேறு நடிகையுடன் திருமணம்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்த ஜாகீர் கான், நடிகை ஒருவருடன் 8 ஆண்டுகள் காதல் உறவில் இருந்துவிட்டு, கடைசியில் வேறு நடிகையை திருமணம் செய்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

மன்சூர் அலி கான் பட்டோடி காலம் முதல் விராட் கோலி காலம் வரை, கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலிப்பதும், திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நாயகிகளை காதலித்திருந்தாலும், அதில் சிலர் மட்டுமே திருமணம் செய்துள்ளார்கள். வீரர்கள் பலரும் இடையிலே காதலை முறித்துக் கொண்டுள்ளனர்.

Former Cricketer Zaheer khan breakup with Actress Isha Sharvani after a 8 year long relationship

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 8 ஆண்டுகளாக பாலிவுட் நடிகையுடன் காதலில் இருந்துள்ளார். "டேவிட்" படத்தில் விக்ரம் காதலிக்கும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வரும் இஷா ஷர்வானியுடன் ஜாகீர் கான் 8 ஆண்டுகளாக காதலில் இருந்திருக்கிறார்.

2005ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட இருவரும் நல்ல நண்பர்களாக மாறி இருக்கின்றனர். அதன்பின் நாளடைவில் நட்பு காதலாக மாற, பின் இருவரும் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கியுள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாக வருவது, பார்ட்டிகளில் ஒன்றாக பங்கேற்பது என்று கிரிக்கெட்டின் நட்சத்திர ஜோடியாகவே வலம் வந்துள்ளனர்.

Former Cricketer Zaheer khan breakup with Actress Isha Sharvani after a 8 year long relationship

ஜாகீர் கானை உற்சாகப்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகளுக்கு இஷா ஷர்வானி மைதானத்திற்கு வந்துள்ளார். 2011ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கூட சில செய்திகள் வெளியானது. ஆனால் 2012ஆம் ஆண்டு ஜாகீர் கான் - இஷா ஷர்வானி காதலை முறித்துக் கொண்டனர். இதற்கான காரணத்தை இருவருமே இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.

இதன்பின் பாலிவுட்டின் வெற்றிப்படமான "சக் தே இந்தியா" படத்தின் நாயகியான சாகரிகா கட்கேவை ஜாகீர் கான் டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் பின்னர் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சக் தே இந்தியா படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த சாகரிகா, கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட் வீரரான ஜாகீன் கானை திருமணம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Story first published: Thursday, July 27, 2023, 9:43 [IST]
Other articles published on Jul 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+