For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினை அடுத்து பதானுக்கும் கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக்கொண்ட ஆல்-ரவுண்டர்

மும்பை : நேற்றைய தினம் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது முன்னாள் ஆல்-ரவுண்டர் யூசுப் பதானுக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 ராஜ ஓட்டம் போடும் சிஎஸ்கேவின் புதிய பேருந்து... தலயோட வரைபடம் சூப்பருங்க ராஜ ஓட்டம் போடும் சிஎஸ்கேவின் புதிய பேருந்து... தலயோட வரைபடம் சூப்பருங்க

சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற அடுத்தடுத்த இரு வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூசுப் பதாக்கு கொரோனா பாதிப்பு

யூசுப் பதாக்கு கொரோனா பாதிப்பு

கடந்த சாலை பாதுகாப்பு உலக தொடரில் சச்சின் தலைமையிலான ஜாம்பவான்கள் விளையாடி கோப்பையை கைப்பற்றினர். இறுதிப்போட்டியில் விளையாடிய யூசுப் பதான் அவுட்டாகாமல் 62 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கவனம் பெற்றார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதுகுறித்து அறிவித்துள்ள அவர், தனக்கு குறைவான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து தன்னுடைய வீட்டிலேயே தன்னை தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவத்தையும் எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதானுக்கு பாதிப்பு

பதானுக்கு பாதிப்பு

கடந்த சில தினங்களில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும், விரைவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த வீரர்கள் பாதிப்பு

அடுத்தடுத்த வீரர்கள் பாதிப்பு

சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய வீட்டில் தன்னை தனிப்படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை செய்து வருகிறார். இந்த சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற அடுத்தடுத்த வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, March 28, 2021, 11:30 [IST]
Other articles published on Mar 28, 2021
English summary
I would request those who came in contact with me to get themselves tested at the earliest -Yusuf
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X