Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 விஷயங்கள் நிச்சயம் இருக்கனும்.. உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டம்.. ஹர்பஜன் முக்கிய அட்வைஸ்!

மும்பை: 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சில முக்கிய விஷயங்களை செய்தாக வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

2013ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருந்து வருகிறது. சுமார் 10 ஆண்டுகள் ஆன போதும் கோப்பை மீதான இந்திய ரசிகர்களின் கனவு நிறைவேறாமலே தான் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கு பல முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை சென்று தோற்றது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்று தோற்றது.

 உலகக்கோப்பை கனவு

உலகக்கோப்பை கனவு

எனவே நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு கொடுக்கும் வகையில் வாய்ப்பு அமைந்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நவம்பரில் நடைபெறுகிறது. இந்த தொடர் இந்திய மண்ணில் நடைபெறுவது தான் கூடுதல் பலம். எனவே எப்படியாவது கோப்பையை வென்று கொடுத்துவிட வேண்டும் என ரோகித் சர்மாவின் படை தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹர்பஜன் சிங் அறிவுரை

ஹர்பஜன் சிங் அறிவுரை

இந்நிலையில் இதற்காக ஹர்பஜன் சிங் டிப்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னை பொறுத்தவரையில் இந்திய வீரர்களிடம் தற்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கம் குறைவாக உள்ளதாக நினைக்கிறேன். எனவே அதனை அதிகரிக்க வேண்டும். அதாவது என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்ற தெளிவு அவசியம். எனவே 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டிற்கு முற்றிலும் மாற்றி கொள்ள வேண்டும்.

 முக்கியமான தேவை

முக்கியமான தேவை

டி20 கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போன்று ஆட முடியாது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல ஆட முடியாது. இதற்காக ஒரு சில வீரர்கள் மட்டும் மாறினால் சரிவராது. உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் 2 அல்லது 3 வீரர்கள் சிறப்பாக விளையாடினால் முடியாது. 8 - 9 வீரர்களாவது குறைந்தபட்சம் சிறப்பான ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். ஓரிரண்டு பேர் போட்டியை வென்றுக்கொடுக்கலாம், ஆனால் கோப்பையை வென்று தர முடியாது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

கடைசி கட்டம்

கடைசி கட்டம்

இது ஒருபுறம் இருக்க, இந்தாண்டு உலகக்கோப்பை தான் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணியின் டி20 திட்டங்களில் இவர்கள் இல்லை. உலகக்கோப்பை முடிவை பொறுத்து தான் 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டிலும் இருப்பார்களா என்பது தெரியவரும்.

Story first published: Sunday, February 26, 2023, 14:53 [IST]
Other articles published on Feb 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+