Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டனில் ஜாலியாக இருக்கும் லலித் மோடி.. சுஷ்மிதா சென்- ஐ திருமணம் செய்வதாக அறிவிப்பு

லண்டன் : ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் சக்தி வாய்ந்த நபராக விளங்கி வந்தவர் லலித் மோடி.

லலித் மோடியின் தீவிர முயற்சியால் தான் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது ஐபிஎல் தொடர் உலக அளவில் பிரபலம் அடைந்ததற்கும், வருமானத்தை ஈட்டுவதற்கும் முக்கிய பங்கு லலித் மோடியை சேரும்.

யார் இந்த லலித் மோடி

யார் இந்த லலித் மோடி

கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த அப்போது உள்ள மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை. பொது தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்பு தர முடியாது எனக் கூற, உடனே தென்னாப்பிரிக்காவில் நடத்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வழங்கினார் லலித் மோடி. இந்த நிகழ்வுக்குப் பிறகு லலித் மோடிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகினர்.

லண்டனுக்கு ஓட்டம்

லண்டனுக்கு ஓட்டம்

பிசிசிஐயின் துணைத் தலைவராக பதவி வகித்த லலித் மோடி தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு மோசடி புகார், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு வழக்குகளில் சிக்கிய லலித் மோடி, இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார்.அதன் பிறகு ஊடக வெளிச்சத்தை விட்டு விலகிய லலித் மோடி சிறிது காலம் தலைமுறைவான வாழ்க்கையே வாழ்ந்தார்.

சுஷ்மிதா சென்னுடன் காதல்

சுஷ்மிதா சென்னுடன் காதல்

தற்போது பிரச்சினை ஓய்ந்தாலும் லலித் மோடி இந்தியா வரவில்லை என முடிவு எடுத்தார். இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் உடன் லலித் மோடி இன்பச் சுற்றுலா சென்றார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது. சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் லலித் மோடி வெளியிட்டார். அப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

 திருமணம் அறிவிப்பு

திருமணம் அறிவிப்பு

இதனை அடுத்து, அதற்கு விளக்கம் அளித்துள்ள லலித் மோடி நாங்கள் இருவரும் டேட்டிங் தான் செய்தோம், திருமணம் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும் என்று குறிப்பிட்ட லலித் மோடி சுஸ்மிதா சென் ஐ தனது சிறந்த பாதியை சந்தித்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார் .மாலத்தீவில் மறக்க முடியாத விடுமுறையை களித்து விட்டு லண்டனுக்கு திரும்பி உள்ளதாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

சுஷ்மிதா சென் கடந்த நான்கு ஆண்டுகளாக ரோமன் ஷால் என்ற நபருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது சுஷ்மிதா , லலித் மோடியுடன் சேர்ந்து உள்ளார் . 56 வயதான லலித் மோடிக்கு மீனல் மோடி என்ற மனைவி இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் புற்று நோயால் காலமானார். இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு லலித் மோடி மீண்டும் ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளார்.

Story first published: Friday, July 15, 2022, 12:15 [IST]
Other articles published on Jul 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+