For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை: முக்கிய ட்ரிக்கை தவறவிட்ட இந்தியா.. இதுதானே சரியான நேரம்.. பாக். சீனியர் அதிருப்தி!

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முக்கியமான ட்ரிக்கை பயன்படுத்தாமல் தவறு செய்துவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

Recommended Video

India A Squad அறிவிப்பு! Kuldeep, Ruturaj, Umran-க்கு வாய்ப்பு | Aanee's Appeal | *Cricket

வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்திய அணி முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கில் சற்று பின் தங்கியுள்ளது. முன்னணி வீரர்கள் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இல்லாததால் இளம் வீரர்கள் ஆர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு தந்துள்ளனர். மிகப்பெரிய தொடரில் அனுபவமே இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பு தருவதா என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பாக். சீனியர் பேச்சு

பாக். சீனியர் பேச்சு

இந்நிலையில் இந்தியா முக்கிய விஷயத்தை செய்யாமல் தவறு செய்துவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர், ஆகிப் ஜாவித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எந்தவகை கிரிக்கெட் என்றாலும் வேகம் தான் மிக முக்கியம். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் போட்டியை வென்று கொடுக்கலாம். ஆனால் 4 தரமான பவுலர்கள் தான் தொடரை வென்று கொடுப்பார்கள்.

காரணம் என்ன

காரணம் என்ன

இப்போதெல்லாம் எந்த பவுலரும் 150 கி.மீ வேகத்தில் பவுலிங் வீசுவதற்கு முயற்சி கூட செய்வது இல்லை. ஆனால் 155 கிமீ வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக்கை பயன்படுத்த இந்தியா தவறவிட்டுள்ளது. அதிக வேகம் மற்றும் சரியான இடத்தில் பந்துவீசுகிறார். இதனை விட வேறு என்ன வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்த தொடரில் அவருக்கு நிறைய வாய்ப்பளித்து அவரை வளர்த்திருக்க வேண்டும்.

 ஆஸ்திரேலிய பிட்ச்

ஆஸ்திரேலிய பிட்ச்

வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் ஆஸ்திரேலிய களத்தில் உம்ரான் மாலிக் போன்ற பவுலர்கள் தான் பயன்படுவார்கள். நானாக இருந்திருந்தால் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் அவரையும் சேர்த்து ஒரு தரமான கூட்டணையை உருவாக்கியிருப்பேன். வெறும் 3 போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக அவரை ஓரம்கட்டுவது சரியில்லை என ஆகிப் ஜாவித் கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 25, 2022, 18:05 [IST]
Other articles published on Aug 25, 2022
English summary
Aaqib Javed about umran malik in asia cup ( ஆசிய கோப்பை தொடர் ) ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முக்கிய திட்டத்தை தவறவிட்டுவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+