டெஸ்ட் போட்டிக்கு நீ திரும்ப வரக்கூடாது… கெயிலுக்கு கேட் போட்ட பழம்பெரும் வீரர்
ஜமைக்கா: 5 ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் விளையாட கெயில் விருப்பம் தெரிவித்துள்ளது ஏற்க முடியாது என்று வெஸ்ட் இண்டீசின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அம்புரோஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கெயில், 2014ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல 2 ஆண்டுகள் கழித்து, இடைவெளிக்குப்பின் 2017ம் ஆண்டு மீண்டும் சர்வேதேச போட்டிக்கு திரும்பினார். 2015ல்7 ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 215 ரன்கள் குவித்தார். அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து கெயில் ஒதுங்கி காணப்பட்டார்.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், உலக கோப்பை போட்டி முடிந்தபின் ஓய்வு பெற்று விடுவேன் என்று அறிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன் அந்த முடிவை திரும்ப பெற்றார் கெயில். ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் விளையாட விருப்பம் என்றார்.

கடும் எதிர்ப்பு
ஓய்வு அறிவிப்பில் கெயிலின் பல்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கர்ட்லி அம்புரோஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஒருநாள் போட்டி, டி 20ல் விளையாடுவதில் பிரச்னை இல்லை. ஆனால், டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட கூடாது.

இதுச சரி கிடையாது
5 ஆண்டுகளாக கெயில் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. இநத சூழ்நிலையில் ஒருபோட்டியில் மட்டும் விளையாடுவேன் என்று கூறுவது சரியில்லை. இளம் வீரர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார்?

பொறுமை இல்லை
ஒருநாள், டி20 போட்டியில் கெயில் அதிரடி வீரர் என்பது உண்மை ஏற்கிறோம். ஆனால், டெஸ்ட் போட்டியில் கெயிலுக்கு விளையாடத் தெரியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை அவசியம், கெயிலுக்கு அந்த பொறுமை இல்லை.

சிறப்பாக ஆடுவார்கள்
நிகோலஸ் பூரன், ஹெட்மயர் போன்ற வீரர்கள், சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடுபவர்கள். சூழலுக்கு தகுந்தவாறு ஆட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள். பந்துவீச்சு சரியாக அமைந்தால், சிறப்பாக ஆடுகின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications