For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் தான் இந்திய அணியின் புதிய கோச்? பிசிசிஐ கசியவிட்ட சீக்ரெட்…! ரசிகர்கள் ஷாக்!

Recommended Video

Praveen Amre Indian Coach : இவர் தான் இந்திய அணியின் புதிய கோச்? ஆலோசனையில் பிசிசிஐ- வீடியோ

மும்பை: இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அனுபவம் மிக்க பிரவீன் ஆம்ரே விண்ணப்பித்துள்ளார்.

உலக கோப்பை தொடருடன் இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்தியா சுற்றுப் பயணம் மேற் கொள்ள உள்ளது.

ஆகையால், 45 நாட்களுக்கு தற்போதிருக்கும் பயிற்சியாளர்களின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டித்து, அறிவிப்பு வெளியிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்து, அதற்கான விண்ணப்பங்களை அளிக்குமாறு கூறியது. பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

கேரி கிறிஸ்டன்

கேரி கிறிஸ்டன்

குறிப்பாக, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்திருக்கிறார். இலங்கையின் ஜெயவர்தனேவும் விண்ணப்பித்துள்ளார்.

சேவாக் விண்ணப்பம்

சேவாக் விண்ணப்பம்

பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் அதிரடி வீரர் சேவாக் அப்ளிகேஷன் போட்டுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பயிற்சியாளர் அருண் குமார் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். இந் நிலையில், தற்போது மேலும் ஒரு மூத்த பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

பிரவீன் ஆம்ரே

பிரவீன் ஆம்ரே

இந்திய முன்னாள் வீரர் பிரவீன் அம்ரே தான் இந்த பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தற்போது விண்ணப்பித்திருக்கிறார். அனுபவமிக்க பிரவீன் அம்ரே, மும்பை ரஞ்சி கோப்பை அணிக்கு சில வருடங்கள் பயிற்சியாளராக பதவி வகித்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும் பயிற்சியாளர் பதவியில் இருந்திருக்கிறார்.

அதிக வாய்ப்பு?

அதிக வாய்ப்பு?

தற்போது அமெரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக பதவியில் இருந்து வரும், இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, இவர் தேர்வாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Monday, July 29, 2019, 15:26 [IST]
Other articles published on Jul 29, 2019
English summary
Praveen Amre applied for batting coach for Indian team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+