Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போவே இந்திய அணியில் சேர்த்துடுங்க… தங்கத்தை தகரமா ஆக்கிடாதீங்க..!!

மும்பை: உலகத்திலேயே மிகவும் கடினமான பணிகளில் ஒன்று இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் பொறுப்பு தான்.

பல இளம் வீரர்களை ஜாம்பவான்களாக மாற்றுவதும், பல ஜாம்பவான்களாக மாறக்கூடியவர்களை, விலாசமே இல்லாமல் மாற்றுவதும் இந்த தேர்வுக்குழுவினர் கையில் தான் உள்ளது.

தேர்வுக்குழுவினர் தரும் வாய்ப்பால் தான் ஒருவர் 'ஹீரோவாக மாறுவதும், ஜூரோவாக மாறுவதும் உள்ளது ..

சச்சின்

சச்சின்

சச்சின் டெண்டுல்கருக்கு 16 வயதாக இருக்கும் போதே அப்போதைய தேர்வுக்குழுத் தலைவரான ராஜ் சிங் வாய்ப்பு வழங்கினார். எதற்கு சிறுவனுக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு என கேலி செய்தவர்கள் , சச்சினின் ஆட்டத்தை பார்த்து வாய் அடைத்து போனார்கள். சச்சினின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவருக்கு வாய்ப்பு வழங்கிய தேர்வு குழுவினர்கள் தான்.

கோலி

கோலி

இதே போன்று கிரிக்கெட் உலகின் மன்னனாக விளங்கும் விராட் கோலி, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்று உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் கலக்கினார். அப்போது தேர்வுக்குழுத் தலைவராக இருந்த தீலிப் வெங்சர்கார் , விராட் கோலிக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்கினார்.

வெங்கசர்கார்

வெங்கசர்கார்

தற்போது அதே வெங்சர்கார் தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஐ.பி.எல், உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கி வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் உடனே வாய்ப்பு வழங்கி அவரை போட்டியில் களமிறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கேள்வி

கேள்வி

ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வயது 19 அல்ல 24 ஆகி விட்டதாகவும், இன்னும் எத்தனை போட்டிகளில் ரன் குவித்து அவர் தனது திறமையை நிரூபித்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல பார்மில் இருக்கும் போதே வீரர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் 27 வயதுக்கு பிறகு வாய்ப்பு வழங்கி என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விஜய் ஹசாரே கோப்பையில் ருத்துராஜ் ஹாட்ரிக் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 13, 2021, 20:16 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+