Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது பொய் செய்தி என கூறுங்கள்.. நம்பவே முடியவில்லை.. கோலி, சச்சின், ரெய்னா, யுவராஜ் இரங்கல்

மும்பை : சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தி பாலிவுட்டை மட்டுமில்லாமல், கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது.

Recommended Video

Sushant Singh Rajputன் நிறைவேறாத ஆசைகள்

தோனியாக அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கிரிக்கெட் உலகிலும் பிரபலம் ஆனார்.

அவரது இந்த எதிர்பாராத மறைவு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் தான் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறி அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தன் இரங்கலை கூறி உள்ளார். சேவாக் கூறுகையில், வாழ்க்கை நிலையற்றதாக உள்ளது. ஒருவருக்கு என்ன கஷ்டம் வருகிறது என்றே தெரியவில்லை. அன்போடு இருப்போம் என கூறி உள்ளார்.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங், இது பொய் செய்தி என கூறுங்கள். சுஷாந்த் ராஜ்புத் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது என கூறி உள்ளார். தவான் கூறுகையில், இதை நம்ப முடியவில்லை, அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

தோனியாக சுஷாந்த் சிங் நடித்து பிரபலாமானவர். தோனி கேப்டனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறோம். இது நியாயமே இல்லை என கூறி உள்ளது. இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என புகைப்படம் வெளியிட்டுள்ளது.

விராட் கோலி

விராட் கோலி

இதை ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ளது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல இந்திய அணி வீரர்கள் இரங்கல் கூறி உள்ளனர்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவர் இளம் வயதில், வெற்றிகரமாக இருக்கும் போது எப்படி? உள்ளே என்ன ஓடுகிறது என்பது நமக்கு தெரியாது. வெளியே இருந்து பார்க்கும் போது எல்லாம் வேறு மாதிரி உள்ளது என சுஷாந்த் சிங் மனதில் இருந்த கவலைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார் யுவராஜ் சிங்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இது அழுத்தத்தை கொடுக்கிறது. இது நடந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. மிகவும் தொந்தரவு செய்கிறது. சிறந்த நடிகர். அமைதியாக ஓய்வு எடு சகோதரா என ரோஹித் சர்மா கூறி உள்ளார்.

விவிஎஸ் லக்ஷ்மன் - அஸ்வின்

விவிஎஸ் லக்ஷ்மன் - அஸ்வின்

மனநலம் மிக தீவிரமான விஷயம். அதற்கு நாம் அளிப்பதை விட இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என விவிஎஸ் லக்ஷ்மன் கூறி உள்ளார். இந்திய டெஸ்ட் அணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் "அடக் கடவுளே.. நோ.. நோ.. நோ.." என கூறி உள்ளார்.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சுஷாந்த் ராஜ்புத் பற்றி கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. மஹியின் வாழ்க்கை வரலாறு படத்துக்காக அவரை பல முறை சந்தித்துள்ளேன். அழகான, எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு நடிகரை நாம் இழந்து விட்டோம் என சுரேஷ் ரெய்னா கூறி உள்ளார்.

Story first published: Sunday, June 14, 2020, 19:22 [IST]
Other articles published on Jun 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+