அஸ்வின் முதல் நட்டு வரை.. கிரிக்கெட் உலகில் கோலோச்சும் தமிழக வீரர்கள்..எப்படி சாத்தியமானது? பின்னணி
சென்னை: இந்திய கிரிக்கெட் உலகில் தமிழக வீரர்கள் பலர் தற்போது கோலோச்ச தொடங்கி உள்ளனர். பல இளம் தமிழக வீரர்கள் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளனர்.
சையது முஸ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றுள்ளது. தொடர் முழுக்க ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தமிழக அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது.
அதிலும் இளம் தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த தொடரில் அணியின் வெற்றிக்கு உதவினார்கள். தமிழக அணி வீரர்கள் பலர் இதனால் ஐபிஎல் அணிகளால் கவனத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கவனம்
தமிழக அணியில் ஆடிய பாபா அபராஜித், சாய் கிஷோர், என் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், அருண் கார்த்திக், சித்தார்த் மணி மாறன் என்று இளம் வீரர்கள் எல்லோரும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளனர். இதில் ஷாருக்கான் போன்ற வீரர்களை ஏற்கனவே ராஜஸ்தான் போன்ற ஐபிஎல் அணிகள் குறி வைக்க தொடங்கி உள்ளது.

எப்படி
அதிலும் தமிழக அணியின் இந்த வெற்றி என்பது முக்கிய வீரர்கள் இல்லாமல் பெற்ற வெற்றியாகும். தமிழக அணியில் விஜய் சங்கர்,முரளி விஜய், நடராஜன், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி போன்ற முக்கியமான முதல் தர வீரர்கள் இல்லாமல் தமிழக அணி இந்த வெற்றியை பெற்றுள்ளது.

கவனம்
இதனால் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழக வீரர்கள் கவனம் ஈர்த்துள்ளனர். சர்வதேச அளவில் நடராஜன், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் கலக்கி வருகிறார்கள். இவர்கள் தற்போது இங்கிலாந்து தொடருக்காக தேர்வாகி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய அளவில் முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி , ஷாருக்கான், அபராஜித் போன்ற வீரர்கள் தெறிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

சிறப்பான ஆட்டம்
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் உலகில் தமிழக வீரர்கள் பலர் தற்போது கோலோச்ச தொடங்கி உள்ளனர். பல இளம் தமிழக வீரர்கள் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளனர். வருண் சக்ரவர்த்தி, ஷாருக்கான் போன்ற வீரர்கள் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பான முயற்சிதான் இதற்கு காரணம். சென்னையில் இருந்து மட்டும் ஒரு காலத்தில் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வான நிலையில் தற்போதெல்லாம் சேலம், திண்டுக்கல் போன்ற உள்மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வாகி வருகிறார்கள்.

டிஎன்பிஎல்
முக்கியமாக டிஎன்பிஎல் தொடர் மூலம் பல இளம் தமிழக வீரர்கள் அடையாமல் காணப்பட்டு உள்ளனர். டிஎன்பிஎல் தொடரை தற்போது பிசிசிஐ அமைப்பே கவனிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் வருடங்களில் இந்திய அணியில் அதிக அளவில் தமிழக வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications