டோணியின் அசத்தல் ஆட்டம்... சமூகவலைதளங்களில் கொண்டாடும் ரசிகர் பட்டாளம்!!
இந்தூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 92 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்த கேப்டன் டோணிக்கு சமூகவலைதளங்கள் ரசிகர்கள் புகழாரம் சூட்டி விமர்சகர்களை வாயடைக்க வைத்துவிட்டனர்.

அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் டோணியின் ஆட்டம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. டோணி தமது கேப்டன் பதவியை கோஹ்லியிடம் கொடுத்துவிட்டு நடையை கட்டலாம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதற்கு நேற்று இந்தூரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டோணி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அற்புதமாக பதிலை அளித்துவிட்டார். 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தது.
அப்போது களமிறங்கிய டோணி தமது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். 86 பந்துகளில் 92 ரன்களைக் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார் அவர். இதில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும். இது ஒருநாள் போட்டிகளில் டோணியின் 60வது அரைசதமும் கூட..
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்காவை நேர்த்தியான பந்துவீச்சால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
டோணியின் அபார ஆட்டத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வி.வி.எஸ். லக்ஷ்மண், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்ரேக்கர் உள்ளிட்டோரும் சமூகவலைதளங்களில் பாராட்டி தள்ளிவிட்டனர்.
டோணியை வாழ்த்தியும் விமர்சகர்களை விமர்சித்தும் நேற்று ட்விட்டரில் போடப்பட்ட சில பதிவுகள்:


Click it and Unblock the Notifications