புதிய கான்ட்ராக்ட் லிஸ்ட் வெளியிட்டது பிசிசிஐ.. ரூ.2 கோடி சம்பளம் வாங்கப்போகும் வீரர்கள் இவர்கள்தான்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது. சில வீரர்களை ஏ பிரிவுக்கு தரம் உயர்த்தியுள்ளது.
இன்று வெளியிட்ட புதிய திருத்தப்பட்ட பட்டியலில் கூறியுள்ள தகவல்படி, ஏ பிரிவு வீரர்களின் எண்ணிக்கை 4லிருந்து 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ பிரிவில், டோணி, கோஹ்லி, ரஹானே, அஸ்வின் ஆகியோரை தவிர இந்த வருடம் புதிதாக முரளி விஜய், புஜாரா மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனற்.

ரூ.2 கோடி
ஏ கிரேட் வீரர்களின் ஊதியம், கடந்த ஆண்டு ரூ.1 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பி பிரிவு
கிரேட் பி பிரிவில் 9 வீரர்கள் உள்ளனர். ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், விருதிமான் சாஹா, ஜஸ்ப்ரிட் பும்ரா, யுவராஜ்சிங் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

புரமோஷன்
சி பிரிவிலிருந்த ராகுல், பும்ரா, யுவராஜ், விருதிமான் சாஹா போன்றோர் பி பிரிவுக்கு இந்த வருடம் முன்னேறியுள்ளார்கள். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தவான் ஆகியோர் பி பிரிவிலிருந்து சி பிரிவுக்கு கீழே போயுள்ளனர். விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் புரமோஷன் பெற்று ஏ பிரிவுக்கு போயுள்ளனர். பி, பிரிவிலுள்ள வீரர்களின் சம்பளம் ரூ.1 கோடியாகும்.

சி பிரிவு
தவான், ராயுடு, அமித் மிஸ்ரா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கருண் நாயகர், ஹர்திக் பாண்ட்யா, நெஹ்ரா, கேதர் ஜாதவ், பார்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவல் குல்கர்ணி, சர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் ஆகிய 16 வீரர்கள் சி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் ஊதியம் ரூ.50 லட்சமாகும்.


Click it and Unblock the Notifications