Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் படை.. 7 பேட்ஸ்மேன்கள், 9 ஆல் ரவுண்டர்கள், 10 பந்துவீச்சாளர்கள்.. சென்னை அணி முழு விவரம் இதோ

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில் சென்னை அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலர்கள் பற்றி பார்க்கலாம். இம்பேக் பிளேயர் விதி இருப்பதால், யாரை வேண்டுமானாலும் தோனி களமிறக்க வாய்ப்புகள் உள்ளது.

அரசன் வருகைக்கு முன் பாடப்படும் துதிப்பாடல் போல் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சாதனைகளை சொல்லி அறிமுகம் செய்யும் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாபெரும் சம்பவத்தை நிகழ்த்தி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

4 முறை சாம்பியன், 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி, சாம்பியன்ஸ் லீக் கோப்பை என்று டி20 ஐபிஎல் தொடர் தொடர்பான அனைத்து சாதனைகளிலும் தனது பெயரை உச்சத்திலேயே வைத்துள்ளது சென்னை அணி.

Full list of csk team 2023 for the 16th edition of IPL

தற்போது தோனியின் கடைசி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவுடன் களமிறங்குகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அணியின் கம்பேக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் கோப்பையை வெல்வதற்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களாக டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக உள்ளனர். அதேபோல் நடுவரிசையில் விளையாடும் பேட்ஸ்மேன்களாக அம்பாதி ராயுடு, சுப்ரன்ஷு சேனாபதி, எம்எஸ் தோனி மற்றும் இளம் வீரர் ஷேக் ரஷீத் ஆகியோர் உள்ளனர்.

Full list of csk team 2023 for the 16th edition of IPL

இதேபோல் சென்னை அணியின் வலிமையே ஆல் ரவுண்டர்கள் தான். தோனிக்கும் ஆல் ரவுண்டர்களுக்கும் 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தும். தோனி இருக்கும் அணியில் நிச்சயம் ஆல் ரவுண்டர்களை தேடி தேடி பிடிப்பார். அந்த வகையில் சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, டுவைன் ப்ரீடோரியஸ், மிட்செல் சாண்ட்னர், ஷிவம் தூபே, பென் ஸ்டோக்ஸ், நிஷாந்த் சிந்து, மொயின் அலி, பகத் வர்மா, அஜய் மண்டல் என்று 9 பேர் இருக்கிறார்கள்.

அதேபோல் பந்துவீச்சாளர்களாக இளம் வீரர் தீபக் சஹர், மஹீஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சொலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மதீஷா பதிரானா, ஆகாஷ் சிங், சிசன்டா மகளா ஆகியோர் இருக்கின்றனர். சிசன்டா மகளா மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் ஜேமிசன் மற்றும் முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக மாற்று வீரர்களாக சென்னை அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Full list of csk team 2023 for the 16th edition of IPL

சென்னை அணி விவரம்: டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, அம்பாதி ராயுடு, சுப்ரன்ஷு சேனாபதி, எம்எஸ் தோனி (கேப்டன்), ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, டுவைன் ப்ரீடோரியஸ், மிட்செல் சாண்ட்னர், ஷிவம் தூபே, பென் ஸ்டோக்ஸ், நிஷாந்த் சிந்து, மொயின் அலி, பகத் வர்மா, அஜய் மண்டல், தீபக் சஹர், மஹீஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சொலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மதீஷா பதிரானா, ஆகாஷ் சிங், சிசன்டா மகளா.

Story first published: Friday, March 31, 2023, 11:35 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+