Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் படை.. 7 பேட்டர்கள், 6 ஆல்ரவுண்டர்கள், 12 பந்துவீச்சாளர்கள்.. குஜராத் அணியின் முழு விவரம் இதோ

அகமதாபாத்: 7 பேட்ஸ்மேன்கள், 6 ஆல் ரவுண்டர்கள், 12 பந்துவீச்சாளர்கள் என்று குஜராத் அணி முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களால் உருவாக்கப்பட்ட அணியாக உள்ளது. இதனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவரையே இம்பேக்ட் பிளேயராக கொண்டு வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று மாலை தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு வரை 8ஆக இருந்த அணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 10ஆக உயர்த்தப்பட்டது.

அதற்கேற்ப புதிதாக அறிமுகமான இரு அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியம் கொடுத்தன. அதில் குஜராத் அணியை ஹர்திக் பாண்டியாவை கோப்பையை வெல்ல வைத்து ஆச்சரியம் கொடுத்தார்.

Full List of players in Gujarat team 2023 for the 16th edition of IPL tournament

டெல்லி, பஞ்சாப், பெங்களூரு அணிகள் 15 ஆண்டுகளாக போராடி ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லாத சூழலில், முதல் தொடரிலேயே குஜராத் அணி வென்றது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இதனால் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்க உள்ள குஜராத் அணி, பலருக்கும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத் அணியில் உள்ள வீரர்கள் யார், அந்த அணி எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். குஜராத் அணியின் பேட்ஸ்மேன்களாக டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், உர்வில் படேல், கே.எஸ்.பரத் ஆகியோர் இருக்கிறார்கள். அனைவருமே அகமதாபாத் மைதானத்தின் தன்மைக்கேற்ப விளையாடக் கூடியவர்கள் என்பதால், சொந்த மண்ணில் அகமதாபாத் அணியை வீழ்த்துவது எளிதாக இருக்காது.

Full List of players in Gujarat team 2023 for the 16th edition of IPL tournament

அதேபோல் குஜராத் அணியின் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விஜய் சங்கர், தர்ஷன் நல்கண்டே, ஒடியன் ஸ்மித் ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் பந்துவீச்சாளர்களாக ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ரஷீத் கான், அல்ஜாரி ஜோசப், சிவம் மாவி, ராகுல் டிவாட்டியா, பிரதீப் சங்வான், யாஷ் தயாள், நூர் அஹ்மத், ஜோஷ்வா லிட்டில் மற்றும் மோகித் சர்மா ஆகியோரை கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 பேட்ஸ்மேன்கள், 6 ஆல் ரவுண்டர்கள், 12 பந்துவீச்சாளர்கள் என்று குஜராத் அணி முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களின் பலத்தால் உருவாக்கப்பட அணியாக உள்ளது. இதனால் இம்பேக்ட் பிளேயர் விதிகளின்படி, பந்துவீச்சாளர்களே இன்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

Full List of players in Gujarat team 2023 for the 16th edition of IPL tournament

குஜராத் அணி விவரம்: டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், உர்வில் படேல், கே.எஸ்.பரத், ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விஜய் சங்கர், தர்ஷன் நல்கண்டே, ஒடியன் ஸ்மித், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ரஷீத் கான், அல்ஜாரி ஜோசப், சிவம் மாவி, ராகுல் டிவாட்டியா, பிரதீப் சங்வான், யாஷ் தயாள், நூர் அஹ்மத், ஜோஷ்வா லிட்டில், மோகித் சர்மா.

Story first published: Friday, March 31, 2023, 12:31 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+