Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 டெஸ்ட்.. 7 வாரம்.. மோதப் போகும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்... இதுதான் "டைம் டைபிள்"!

ஆண்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் செல்லும் இந்திய அணி அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளில் 7 வாரம் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா கலந்து கொள்ளவுள்ளது. ஜூலை 6ம் தேதி முதல் இந்தத் தொடர் தொடங்குகிறது.

இரு பயிற்சி ஆட்டங்கள்

இரு பயிற்சி ஆட்டங்கள்

ஜூலை 9ம் தேதி செயின்ட் கீட்ஸ் தீவில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்திதல் இந்தியா விளையாடும். இப்போட்டி 3 நாட்கள் கொண்டது. 2வது பயிற்சி ஆட்டம் ஜூலை 14ம் தேதி இதே மைதானத்தில் நடைபெறும்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும். ஆண்டிகுவாவில் இந்த போட்டி நடைபெறும்.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெறும். இப்போட்டி ஜூலை 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும்.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும். ஆகஸ்ட் 9 முதல் 13ம் தேதி வரை இப்போட்டி நடைபெறும்.

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட் - டொபாகோவில் நடைபெறும். ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி இப்போட்டி நடைபெறும்.

கடைசியாக 2011ல்

கடைசியாக 2011ல்

இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றிருந்தது. அப்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆடி அதை 1-0 என்ற கணக்கில் வென்றது. அப்போது கேப்டனாக இருந்தவர் டோணி.

கோஹ்லிக்கு முதல் தொடர்

கோஹ்லிக்கு முதல் தொடர்

மேற்கு இந்தியத் தீவுகளில் கோஹ்லி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரில் ஆடுவது இதுவே முதல் முறை என்பதால் கோஹ்லி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Friday, June 3, 2016, 12:32 [IST]
Other articles published on Jun 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+