Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பையனை தூக்கிட்டு நம்மாளை விளையாட விடுங்க..! கங்குலி ஐடியாவுக்கு ‘ஜே’ சொன்ன கிரிக்கெட் எம்.பி

மும்பை: தொடக்க வீரராக ஹிட்மேன் ரோகித்தை டெஸ்டிலும் களமிறக்க சொல்லும் கங்குலியின் கருத்து சரியே என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுலின் ஆட்டம் இப்போது படுமோசம். நல்ல பேட்ஸ்மென் என்று அவரை பலரும் பாராட்டியது ஏன்தானோ என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது அவரது சமீபத்திய ஸ்கோர்கள்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களை அவர் பயன்படுத்தி கொள்ளவே இல்லை. முதல் இன்னிங்சில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்சில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

பேட்டிங்கில் சொதப்பல்

பேட்டிங்கில் சொதப்பல்

2வது டெஸ்ட் போட்டியிலும் நிலைமை அப்படி தான் இருந்தது. முதல் இன்னிங்சில் வெறும் 13 ரன்கள், 2வது இன்னிங்சில் 63 பந்துகளில் வெறும் 6 ரன்கள். மோசமான இன்னிங்சை ஆடி ஏகமாக வாங்கி கட்டிக் கொண்டுவிட்டு, சென்றார்.

கங்குலி யோசனை

கங்குலி யோசனை

எனவே அவரை மாற்றுமாறு பல தரப்பிலும் இருந்தும் குரல்கள் எழுந்தன. அடுத்ததாக தென்னாப்பிரிக்கா தொடர் வருகிறது. எனவே, மோசமான பார்மில் இருக்கும் ராகுலை நீக்கிவிட்டு, ரோகித்தை களமிறக்குங்கள் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து கூறியிருந்தார்.

சரியான நபர்

சரியான நபர்

அவரது கருத்துக்கு கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது: கங்குலியின் சொல்வது ரொம்ப சரி. ராகுலை விட ரோகித் தான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்க சரியான வீரர். ராகுல் நன்றாக ஆடி ஸ்கோர் செய்தால் மீண்டும் பார்முக்கு வந்துவிடுவார்.

நிச்சயம் தர வேண்டும்

நிச்சயம் தர வேண்டும்

ஆனால் ரோகித்தை ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டக் கூடாது. டெஸ்ட் அணியில் ரோகித்தை எடுத்தால் அவரை கண்டிப்பாக ஆட வைக்க வேண்டும். ஆனால் ரோகித்தை ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டக் கூடாது. டெஸ்ட் அணியில் ரோகித்தை எடுத்தால் அவரை கண்டிப்பாக ஆட வைக்க வேண்டும்.

2 ஆண்டுகள் ஆகும்

2 ஆண்டுகள் ஆகும்

இப்போது வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பே இல்லாமல் போய் விடும் என்றார். அணியின் எக்ஸ் பேக்டர் என்று சொல்வோமே, அது தான் ரோகித், எனவே அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

Story first published: Saturday, September 7, 2019, 18:19 [IST]
Other articles published on Sep 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+