Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் கவனிக்கலனு நினைக்காதீங்க ஜடேஜா.. எம்பி சார் பார்த்திட்டாரு! சரியான பாயிண்டை பிடித்த கம்பீர்

மும்பை : உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றதால் ரசிகர்கள் தற்போது உற்சாகமாக இருக்கின்றனர். எனினும் இந்திய அணியில் சில குறைகள் மட்டும் இன்னும் இருக்கிறது.

அதனை சரி செய்தால் இந்திய அணி நிச்சயம் பலம் வாய்ந்த அணியாக விளங்கும். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

Gambhir advices Ravindra Jadeja to contribute more in batting for team india

ஆனால் ஜடேஜா பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. கடந்த ஏழு இன்னிங்ஸ்களாக ஜடேஜா 20 ரன்களை கூட பேட்டிங்கில் தாண்டாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து யாரும் விமர்சிக்காத நிலையில் கம்பீரின் கண் பார்வையில் ஜடேஜா சிக்கிக்கொண்டார்.

இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், நமக்கு நிச்சயமாக தெரியும் ஜடேஜா எந்த ஆடுகளத்திலும் சரி எந்த நாளிலும் சரி ஜடேஜாவால் 10 ஓவர் வீச முடியும். அவர் பிரமாதமான ஃபீல்டரும் கூட, ஆனால் தற்போது உள்ள அணியில் ஜடேஜா பேட்டிங்கிலும் பங்களிப்பை செலுத்த வேண்டும்.

நம்பர் 7 என்பது மிகவும் முக்கியமான இடமாக இருக்கிறது. உலகக்கோப்பை போன்ற தொடரில் வெறும் ஆறு பேட்ஸ்மேன்களை வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாது. உதாரணத்திற்கு இஷான் கிஷன் ஐந்தாவது இடத்தில் விளையாடினால், அவர் மீதும் சில சந்தேகங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு இருக்கிறது. எனவே ஜடேஜா முன்பு போல் பேட்டிங்கிலும் ஆட்டத்தை வென்று தர வேண்டும்.ஜடேஜா பேட்டிங் செய்யும்போது சில சமயம் 10 ஓவர்களில் வெற்றிக்கு 80 அல்லது 90 ரன்கள் தேவைப்படலாம்.

அப்போது நீங்கள் கீழ் வரிசை வீரருடன் இணைந்து விளையாட வேண்டிய சூழல் வரும் என்று கம்பீர் அறிவுரை கூறியிருக்கிறார்.ஜடேஜா தற்போது தடுமாறி வருவதால் இந்திய அணியில் கூடுதலாக அஸ்வினும் வாஷிங்டன் சுந்தரும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியனின் பேட்டிங் வரிசை 8 வரை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயம் கீழ் வரிசை வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்கவில்லை என்றால் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நிச்சயம் நம்மால் ஜெயிக்க முடியாது.

Story first published: Tuesday, September 19, 2023, 23:48 [IST]
Other articles published on Sep 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+