Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்துக்கே ரோல் மாடல் சச்சின்..: மனம் திறக்கும் கவுதம் காம்பீர்!

டெல்லி: சச்சின் டெண்டுல்கர் தமக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நல்ல ரோல் மாடல் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் மனம்திறந்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவுதம் காம்பீர் பேசுகையில், சச்சின் எனக்கு மட்டும் ரோல் மாடல் அல்ல.. ஒட்டுமொத்த உலகத்துக்குமே சச்சின்தான் ரோல் மாடல்.

Sachin and Gautam Gambhir

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது டெண்டுல்கருடன் விளையாடிய நினைவுகள் மறக்க முடியாதது. அது அவரது கடைசி உலகக் கோப்பை போட்டி.

அதனால் அவருக்கு அந்த கோப்பையை அர்ப்பணித்தோம். அதேபோல் 2009ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கருடன் பார்ட்னெர்ஷிப் இணைந்ததும் மறக்க முடியாத அனுபவம்.

அதேபோல் 2010-11ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் டெண்டுல்கருடன் விளையாடி இருவரும் 100 ரன்களை குவித்திருந்தோம். அதுவும் மறக்க முடியாத ஒன்று என்றார்.

Story first published: Thursday, November 21, 2013, 14:17 [IST]
Other articles published on Nov 21, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+