Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பின்னுக்கு எதிராக இந்திய வீரர்களின் திணறல்.. கம்பீர் தந்த ஆதரவு.. அடேங்கப்பா!

மும்பை: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் இந்திய வீரர்கள் சொதப்புவது குறித்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இதனை அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

நான்காவது டெஸ்ட்

நான்காவது டெஸ்ட்

ஆஸ்திரேலியா தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து விட்ட போதும் பிட்ச் மீதான சர்ச்சை மட்டும் முடிவதாக இல்லை. முதல் இரண்டு போட்டிகள் 3 நாட்களிலும், மூன்றாவது போட்டி இரண்டரை நாட்களிலும் முடிந்து விட்டன. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்திய அணியே தோற்றது தான்

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

சொந்த மண்ணில் மிகவும் பலமாக இருக்கும் இந்திய அணி கடந்த போட்டியில் மோசமாக சொதப்பியது. மேலும் 75 என்ற குறைந்த இலக்கை ஆஸ்திரேலியா எட்டி வெற்றி பெற்றது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலில் இந்திய வீரர்கள் பலவீனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கம்பீர் பதிலடி

கம்பீர் பதிலடி

இந்நிலையில் அதற்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ரோகித் சர்மா, விராட் கோலி, சட்டீஸ்கர் புஜாரா போன்றோர் ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக ஆட கூடியவர்கள். இதனால்தான் 100 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடி உள்ளனர். ஒருவேளை அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் மட்டும் சிறப்பாக இருந்தால் டூர் டெஸ்ட் போட்டியில் ஆடி இருக்க முடியாது.

டி ஆர் எஸ் முறை

டி ஆர் எஸ் முறை

டி ஆர் எஸ், எல்.பி.டபிள்யு போன்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்ட பிறகு தான் இந்த விக்கெட்கள் சரிகின்றன. இல்லையென்றால் இப்படி எல்லாம் ஆகியிருக்காது என கம்பீர் கூறியுள்ளார்.

 இவ்வளவு குறைவா?

இவ்வளவு குறைவா?

தொடர்ந்து பேசிய அவர், என்னதான் சூழலுக்கு ஏற்ற பிட்ச் தயார் செய்தாலும் 2.5 நாட்களில் போட்டி முடிவது சரியல்ல. முழுவதுமாக ஐந்தாவது நாள் வரை போட்டி சென்றால்தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 8, 2023, 13:53 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+