கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக ஆடுகிறாரா?
கொல்கத்தா: சவுரவ் கங்குலியின் ஐபிஎல் கனவு இன்னும் தீரவில்லை மாறாக அது விரைவில் நனவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஐபிஎல்-4 சீசனில் கங்குலியை ஏலத்தில் எடுப்பாரில்லை. இதை சற்றும் எதிர்பாராத கங்குலி அதிர்ச்சி அடைந்தார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணியே கைவிட்டுவிட்டது.
இந்நிலையில் கங்குலியிடம் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடூவீர்களா என்று கேட்டதற்கு, நீங்களே பார்ப்பீர்கள் என்று புன்னகைத்தார்.
இலங்கை வீரர்களை வரும் மே மாதம் 5-ம் தேதிக்குள் நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மஹிலா ஜெயவர்த்தனே தற்போது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி கேப்டனாக இருக்கிறார். அவர் நாடு திரும்புகையில் சவுரவ் கங்குலி அந்த இடத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை பாதியில் விட்டுவிட்டு கிளம்பும் இலங்கை வீரர்கள் மே மாதம் மேற்கொள்ளும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பயிற்சி பெறப்போகிறார்கள்.


Click it and Unblock the Notifications