Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அணியை ஒப்பிட்டு கம்பீர் சொன்ன கதை.. டி20 உலககோப்பை வேண்டும் என்றால்.. இதை செய்யுங்க !

மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

Recommended Video

விராட் கோலியின் இடத்தை மாற்ற வேண்டுமா? கடுப்பான கவுதம் கம்பீர்

வரும் 20, 23, 25 ஆம் தேதிகளில் ஆகிய மூன்று டி20 போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. இந்த தொடர் கடும் சவாலாக இந்திய அணிக்கு இருக்கும் என கருதப்பட்டது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், ம மார்ஸ் போன்ற வீரர்கள் இந்திய தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

ஆரோன் பிஞ்ச்க்கு நெருக்கடி

ஆரோன் பிஞ்ச்க்கு நெருக்கடி

எனினும் ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல், டிம் டேவிட் ,ஜோஸ் ஹைசல்வுட் , பாட் கம்மின்ஸ் என மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறார்கள். இந்திய தொடர் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச்க்கு கடும் சவாலை கொடுத்திருக்கிறது. தனது மோசமான ஃபார்ம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிஞ்ச், டி 20 போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஆடுகளம்

ஆடுகளம்

போட்டி நடைபெற உள்ள மொகாலி, நாக்பூர், ஹைதராபாத் என மூன்று ஆடுகளமும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இதனால் இரு அணி வீரர்களுக்கும் கடும் நெருக்கடி காத்திருக்கிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வெல்வது குறித்து கௌதம் கம்பீர் தோனியோட அணியை ஒப்பிட்டு கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

ஆஸியை வீழ்த்தினோம்

ஆஸியை வீழ்த்தினோம்

அதாவது டி20 உலக கோப்பையில் நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் .ஆஸ்திரேலியாவை நீங்கள் தோற்கடிக்க வில்லை என்றால் டி20 உலக கோப்பை உங்களுக்கு கிடையாது. நீங்கள் 2007 ஆம் ஆண்டு இந்தியா டி20 உலக கோப்பை என்றதை எடுத்துப் பாருங்கள். அரை இறுதியில் நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். இதேபோன்று 2011 ஆம் ஆண்டும் காலருதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம்.

இல்லையேன்றால் முடியாது

இல்லையேன்றால் முடியாது

இதன் மூலம் தான் எங்களால் அப்போது உலக கோப்பையை வெல்ல முடிந்தது. உங்களால் இதை செய்ய முடியவில்லை என்றால் டி20 உலக கோப்பை உங்களுக்கு கிடையாது என்று கூறினார்.நடப்பு டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவும் , டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் மோதுவதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Sunday, September 18, 2022, 20:16 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+