Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க ரோகித்..? இன்றும் 2 தவறு செஞ்சி இருக்கீங்க.. கம்பீர் விளாசல்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Recommended Video

Virat Kohli-ன் மனநிலையை மாற்ற Paddy Upton-ஐ களமிறக்கிய BCCI *Sports

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மாவின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கம்பீர் பேச்சு

கம்பீர் பேச்சு

இது குறித்து பேசிய கம்பீர், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வாங்கப்பட்டு இருப்பது நல்ல முடிவு தான். ஆனால் அவருக்கு பதில் தீபக் ஹூடாவை தான் அணியில் சேர்த்திருக்க வேண்டும். பந்துவீச்சின் போது தீபக் ஹூடாவையும் பயன்படுத்தி இருக்கலாம். இந்த வாய்ப்பை இந்தியா வீணடித்துவிட்டதாக நினைக்கிறேன்.

தினேஷ் கார்த்திக் ஏன்?

தினேஷ் கார்த்திக் ஏன்?

இதே போன்று ரிஷப் பண்டை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக்கும் அணியில் நீடிக்கிறார். இது தவறான முடிவு. தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, ரிஷப் பண்டை வைத்திருக்க வேண்டும்.ஹர்திக் பதிலாக தீபக் ஹூடாவை சேர்த்திருக்க வேண்டும். இந்த இரண்டு தவறை ரோகித் செய்துவிட்டதாக கம்பீர் விமர்சித்துள்ளார்.

உண்மையான காரணம்

உண்மையான காரணம்

இதே போன்று சபா கரீம் போன்ற முன்னாள் வீரர்களும் ரிஷப் பண்டை பிளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், ரோகித் சர்மா, டிராவிட் கூட்டணி எடுத்த முடிவு சரியானது தான். அதற்கு காரணம், ரிஷப் பண்ட் ஒரு ஃபினிஷர் அல்ல. அவர் அதிரடியாக ஆடுவார் என்பது உண்மை தான். ஆனால் டி20 போட்டியில் இந்திய அணிக்காக அவர் பெரிய இன்னிங்சை ஆடவில்லை.

உண்மை என்ன?

உண்மை என்ன?

அப்படி ஆடி இருந்தாலும், அது நடுவரிசையில் தான் விளையாடி இருக்கிறார். ஆனால் ரிஷப் பண்டை விட சூர்யகுமார் யாதவ் தான் சிறப்பாக ஆடி இருக்கிறார். இதனால் ரிஷப் பண்டை நடுவரிசையில் இடம் கிடைக்காது.இதே போன்று ஃபினிஷர் ரோலில், தினேஷ் கார்த்திக் தான் கடந்த 6 மாதமாக சிறப்பு ஆடி இருக்கிறார். தற்போது திடீரென்று அந்த இடத்தில் ரிஷப் பண்டை வைத்து ஆட வைப்பது முட்டாள் தனம். இத்னை தான் கம்பீர் போன்ற வீரர்கள் திரும்ப திரும்ப செய்கின்றனர்,

Story first published: Wednesday, August 31, 2022, 20:51 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+