Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லியை விட்டு ஓடி போனவன் தானே நீ.. மீண்டும் வம்புக்கிழுத்த கம்பீர்.. டிவிட்டரில் வந்த சண்டை

லக்னோ : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர் தற்போது ஓய்வு பெற்ற பிறகும் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியிடம் மோதலில் ஈடுபட்டது இதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்துள்ளது.

அப்போது இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கௌதம் கம்பீர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது டெல்லி கிரிக்கெட்டை விட்டு அழுத்தம் ஏற்படுவதாக கூறி ஓடிப்போன நபர் தற்போது காசுக்காக என்னை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார்.

Gautam Gambhir cryptic tweet created controversy again

கலியு உலகத்தில் தப்பி ஓடிய நபர் எல்லாம் நீதிமன்றத்தை நடத்தி வருகிறார் என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இதனை பார்த்ததும் கம்பீர் விராட் கோலியை தான் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார் என சில ரசிகர்கள் கொதித்து எழுந்தனர். காரணம் விராட் கோலி அண்மை காலமாக டெல்லியில் இருந்து மும்பையில் குடியேறி தனது மனைவியுடன் தங்கி வருகிறார்.

மேலும் கோலி தான் அழுத்தம் காரணமாக கேப்டன் பதிவை ராஜினாமா செய்ததாக கூறினார். இதனால் கம்பீர், விராட் கோலியை தான் சாடி இருப்பதாக முதலில் பேசப்பட்டது. ஆனால் டெல்லி கிரிக்கெட்டில் துணைத் தலைவராக இருந்த ரஜத் சர்மா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது விராட் கோலி தம்மை விட அதிகம் புகழ்பெற்று இருப்பதால் பொறாமையில் கம்பீர் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என பேசினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாகத்தான் கம்பீர் இந்த ட்விட்டை போட்டுள்ளார். எனினும் காசுக்காக இதுபோன்ற செய்தியை பரப்புகிறார்கள் என கம்பீர் போட்டு இருப்பது மறைமுகமாக விராட் கோலி ரசிகர்களை தான் தாக்குகிறார் என நம்பப்படுகிறது. இதனிடையே நேற்றைய சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் கூட கம்பீர் வந்ததும் ரசிகர்கள் கோலி! கோலி என கத்தி அவரை வெறுப்பேற்றினர். இதனால் கடுப்பான கம்பீர் ரசிகர்களை பார்த்து முறைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது.

Story first published: Thursday, May 4, 2023, 18:10 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+