Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சொந்தமா யோசிக்கல..கோலியை காப்பி அடிக்கிறார்”.. ரோகித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி.. கம்பீர் கருத்து

மும்பை: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் சூழலில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் உண்மை காரணம் விராட் கோலி தான் என கம்பீர் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 - 0 என முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி கண்ட சூழலில் 2வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நிலைமை வலுவாகியுள்ளது. எப்படியும் இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரோகித்தின் கேப்டன்சி

ரோகித்தின் கேப்டன்சி

விராட் கோலியிடம் இருந்து கேப்டன்சி பதவியை ஏற்ற ரோகித் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவரின் கேப்டன்சி கேள்விக்குறியாகவே இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றுக்கொண்ட போதும், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வழி நடத்தியிருக்கிறார். இதனால் இந்த ஆஸ்திரேலிய தொடர் மீது அவரை ரசிகர்கள் கவனித்தனர்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

இந்நிலையில் கோலியை அப்படியே ரோகித் காப்பி அடிப்பதாக கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டன் ஆவார். ஆனால் அவருக்கும் விராட் கோலிக்கும் பெரியளவில் வித்தியாசங்கள் இருந்தது கிடையாது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஏற்படுத்தி வைத்திருந்த திட்டங்களையும், டெம்ப்ளேட்களையும் ரோகித் பின்பற்றி வருகிறார்.

சொந்த ப்ளான் இல்லை

சொந்த ப்ளான் இல்லை

இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலி கையாண்ட விதம் அட்டகாசம். ஆனால் ரோகித் சர்மா தனக்கென ஒரு டெஸ்ட் டெம்ப்ளேட்டை இதுவரை உருவாக்கிக்கொள்ளவில்லை. அவர் கோலியின் ஐடியாக்களையும்,வியூகங்களையும் பின்பற்றி வருகிறார். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடியை பயன்படுத்திய விதம் கேப்டன்சி ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளது என கம்பீர் கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு

முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 64.6 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதனால் இறுதி சுற்றுக்கான போட்டியில் இருந்து தென்னாபிரிக்க அணி வெளியேறிவிட்டது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா,இலங்கை என 3 அணிகள் மட்டுமே போட்டியில் உள்ளன. இன்னும் ஒரு வெற்றி கண்டால் கூட இந்தியா இறுதி சுற்றுக்கு சென்றுவிடும்.

Story first published: Monday, February 20, 2023, 12:50 [IST]
Other articles published on Feb 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+