Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவின் இடத்திற்கு ஆபத்து..காயமடைந்த வீரர்களுக்கு கம்பீர் சொன்ன செம பிளான்..ஃபாலோ செய்யுமா பிசிசிஐ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் இனி ஜடேஜா எளிதில் இடம் பிடிக்க முடியாத படி அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருவதாக கம்பீர் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இது குறித்து பேட்டி அளித்த கம்பீர், இந்தியா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த உடனேயே இந்திப் போட்டியில் நாம் வெல்ல வாய்ப்பு இல்லை என்று எனக்கு தெரியும்.

ஆனால் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியை வெற்றி வரை அழைத்து சென்றார். இனி அக்சர் பட்டேலை அணியை விட்டு நீக்குவது எளிதான காரியம் அல்ல.

ஜடேஜாவுக்கு ஆபத்து

ஜடேஜாவுக்கு ஆபத்து

ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்த வந்தாலும், உடனே இந்திய அணிக்குள் வர முடியாது. அவருடைய இடத்திற்கு அக்சர் பட்டேலால் ஆபத்து வந்த விட்டது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அவர் கலக்கி வருகிறார். முதல் டி20 போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இனி அவருடைய பேட்டிங் திறமை அதிகமாக தான் ஆகும். இனி மேலும் இது போன்ற ஆட்டத்தை அக்சர் பட்டேலிடம் எதிர்பார்க்கலாம்.

நல்ல தலைவன்

நல்ல தலைவன்

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு ஒரு நல்ல தலைவனாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தோல்வியின் மூலம் அவர் நிறைய விஷயங்களை கற்று கொண்டு இருப்பார். நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும். பந்துவிச்சாளர்களை ஹர்திக் அணுகும் முறை. போட்டியை கையாளும் முறை எல்லாம் ஹர்திக் சிறப்பாக செயல்பகிறார். டாஸ் விசயத்தில் தவறு செய்கிறார் என்பதை ஏற்க முடியாது.

கேப்டன் என்ன செய்வார்?

கேப்டன் என்ன செய்வார்?

காரணம், பந்துவீச்சாளர்கள் நோ பால் வீசினால் கேப்டனால் என்ன செய்ய முடியும். இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் அந்த தவறை செய்யாமல் இருந்தால், இந்நேரம் இந்தியா வென்று இருக்கும். எனவே ஹர்திக் சவாலை தேர்ந்து எடுக்கும் முறை பாராட்டுக்குரியது. ஆர்ஸ்தீப் சிங் காயத்திலிருந்து குணமடைந்த நேரடியாக விளையாட வைக்கப்பட்டு இருக்கிறார்.

கம்பீர் யோசனை

கம்பீர் யோசனை

இதனால் தான் ஆர்ஸ்தீப் சிங் நோ பால் வீசி இருக்கிறார். வலை பயிற்சியின் போது நோ பால் வீசாமல் பயற்சி எடுத்ல் தான் போட்டியிலும் நோ பால் வீசாமல் இருக்க முடியும். இதனை எல்லாம் பந்துவீச்சசாளர்கள் தான் பார்க்க வேண்டும். காயமடைந்த வீரர்களை இனி உள்ளூர் போட்டியில் விளையாட வைத்து, அவர்கள் தங்களது உத்வேகத்தை மீட்ட பிறகு, இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள். அது தான் சரியான முறை என்று கம்பீர் கூறினார்.

Story first published: Friday, January 6, 2023, 12:00 [IST]
Other articles published on Jan 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+