Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வரும் கம்பீர்? பிசிசிஐயிடம் விண்ணப்பிக்க முடிவு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார்.

அவருடைய பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் தேடும் பணி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வர அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Gautam gambhir is on the race for next Head coach of indian cricket team

பாஜகவின் எம்பி ஆக இருந்த கௌதம் கம்பீர் அண்மையில் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் முழு நேர கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ள கம்பீர், லக்னோ அணியின் மெண்டராக பதவியில் இருந்து விலகி கொல்கத்தா அணியின் மெண்டர் ஆக
திகழ்ந்து வருகிறார்.

கௌதம் கம்பீருக்கு பயிற்சியாளர் பொறுப்பு என்பது புதிதல்ல. மேலும் அணியை ஆக்ரோஷமாக மாற்றி வழிநடத்துவதில் கம்பீர் வல்லவராக திகழ்கிறார். மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் எல்லாம் கௌதம் கம்பீருக்கு ஜூனியர்கள் தான். மேலும் இவ்விரண்டு வீரர்களும் இனி அதிக காலம் இந்திய அணிக்காக விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.

இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டால் அது சிறப்பானதாக இருக்கும். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இனிவரும் காலத்தில் அதிக அளவு விளையாடப் போகிறது. அந்த சூழலில் கம்பீர் போன்ற அனுபவ சாலி இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும்போது அது அணியின் செயல்பாட்டை நிச்சயம் ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை குறி வைத்து தான் கம்பீர் தற்போது முழுநேர அரசியலில் இருந்து விடுபட்டு கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட போகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக விண்ணப்பத்தை வரவேற்கும் போது கம்பீர் தமது விண்ணப்பத்தை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. கம்பீர் விண்ணப்பித்தால் நிச்சயம் அடுத்த பயிற்சியாளர் அவர் தான் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Friday, May 10, 2024, 12:39 [IST]
Other articles published on May 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+