Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா உடனான உறவு இன்று, நேற்று தொடங்கியது அல்ல.. பயிற்சியாளர் கம்பீர் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தனக்கு இருக்கும் நீண்ட கால உறவு குறித்து தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். தங்களுக்குள் இருக்கும் உறவு வெறும் பயிற்சியாளர் கேப்டன் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும், இது அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடிய காலத்திலிருந்தே தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் இடையே பலமான தொடர்பு இருப்பது அணியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்று கம்பீர் குறிப்பிட்டார். அப்போதுதான் இருவராலும் ஒருமனதாக அணியின் நலனுக்கான சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Gautam Gambhir

ரோஹித் சர்மாவுடனான தனது நட்பு குறித்து ஜியோஸ்டார் தளத்தில் பேசிய கம்பீர், "ரோஹித்திற்கும் எனக்கும் இடையிலான உறவு வெறும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சார்ந்தது மட்டுமல்ல. ரோஹித் இந்திய அணிக்குள் நுழைந்தபோது நான் ஒரு மூத்த வீரராக இருந்தேன். எனவே, எங்கள் நட்பு அன்றிலிருந்தே தொடங்குகிறது" என்று கூறினார்.

IND vs JPN: ஜப்பானை ஏமாற்றி வென்றோம் என சொல்வதா? ஆகாஷ் சோப்ரா காட்டம்

IND vs JPN: ஜப்பானை ஏமாற்றி வென்றோம் என சொல்வதா? ஆகாஷ் சோப்ரா காட்டம்

இது குறித்து பேசிய அவர், "ரோஹித்திற்கு என்னை நீண்ட நாட்களாகத் தெரியும். நான் ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்த புதிய பயிற்சியாளர் அல்ல. ரோஹித்தின் ஆட்டத்தையோ அல்லது தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதையோ புதிதாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று கம்பீர் விளக்கமளித்தார்.

"நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடியிருப்பதால், ஒருவருக்கொருவர் எண்ணங்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு எனது சிந்தனை தெரியும், எனக்கு அவரது சிந்தனை நன்றாகத் தெரியும். சில நேரங்களில் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இறுதியில் அணியின் நலனுக்கு எது சிறந்ததோ, அதுவே இறுதி முடிவாக இருக்கும்" என்றார்.

இந்திய அணி பேட்டிங் மோசமாக இருக்கிறது.. பவுலிங் பிட்சில் சுத்தமாக ஆட தெரியல.. வசீம் ஜாபர்

Also Read

இந்திய அணி பேட்டிங் மோசமாக இருக்கிறது.. பவுலிங் பிட்சில் சுத்தமாக ஆட தெரியல.. வசீம் ஜாபர்

தாம் இதுவரை பணியாற்றிய கேப்டன்களிடமும் இதையே உணர்ந்ததாகக் கூறிய கம்பீர், அனைவரின் ஒரே நோக்கம் இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது மட்டுமே என்று குறிப்பிட்டார். கம்பீர், ரோகித் சர்மா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கம்பீரின் இந்த கருத்து அமைந்துள்ளது. இதனால் கம்பீர், கோலி, ரோகித் கூட்டணி 2027 உலககோப்பை வரை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, September 24, 2026, 13:54 [IST]
Other articles published on Sep 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+