Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் ஒரு **** செய்யல.. ரோகித் vs ரிக்கிப் பாண்டிங்கில் யார் சிறந்தவர்??.. கம்பீர் கடும் விளாசல்!

மும்பை: கிரிக்கெட் உலகம் முழுவதும் விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் ஒப்பீடு குறித்து விவாதம் நடந்த சூழலில் கவுதம் கம்பீர் ரோகித் சர்மாவை, ரிக்கிப் பாண்டிங்குடன் சேர்க்கலாமா என்பது குறித்து பேசியுள்ளர்.

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா, தற்போது உலகின் மிகவும் அச்சுறுத்தலான வீரராக வலம் வருகிறார். இதே போல வெற்றிகரமான கேப்டனாகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் மன்னனாக இருக்கும் ரோகித், தனது முதல் 6 ஆண்டுகளில் 2 சதங்களை மட்டுமே அடித்திருந்தார். அதன்பின் ஓப்பனராக தோனி வாய்ப்பு கொடுத்த பின்னரே வரலாறுகள் படைக்கப்பட்டன.

ரோகித்தின் ஃபார்ம்

ரோகித்தின் ஃபார்ம்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் ரோகித் சர்மா தான் ஆகும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக்கிற்கு பிறகு ரோகித் தனது பெயரை சேர்த்தார். ரோகித்தின் தற்போதைய நிலைமையை எடுத்துக்கொண்டால், ஒருநாள் கிரிக்கெட்டில் உலகில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் ரிக்கிப் பாண்டிங்கை முந்த ஒரு சதம் தான் தேவை.

ரோகித்தின் ரெக்கார்ட்

ரோகித்தின் ரெக்கார்ட்

ரோகித் சர்மா தற்போது வரை 237 போட்டிகளில் விளையாடி 29 சதங்களுடன் 9,537 ரன்களை குவித்துள்ளார். ரிக்கிப்பாண்டிங் 375 போட்டிகளில் 30 சதங்களுடன் 13,704 ரன்களை விளாசியுள்ளார். எனவே ரோகித் சர்மா சிறந்தவரா? ரிக்கிப் பாண்டிங் சிறந்தவரா ? என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

கம்பீர் விளக்கம்

கம்பீர் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து கம்பீர் பேசியுள்ளார். அதில், ரிக்கிப் பாண்டிங்கை விட ரோகித் சர்மா சிறந்த வீரர் என்று நான் கூறுவேன். ஏனென்றால் இந்திய துணை கண்டத்தில் பாண்டிங் எந்தவொரு **** செய்தது கிடையாது. ஆனால் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியுள்ளார். இந்திய துணை கண்டங்களில் பாண்டிங் 87 போட்டிகளில் விளையாடி 3,109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி 39.85 ரன்கள் ஆகும்.

சுவாரஸ்ய தகவல்

சுவாரஸ்ய தகவல்

மற்றொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், கடந்த 4 - 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோகித் சர்மா நிலையான ஃபார்மில் இல்லை. பெரியளவில் சாதிக்கவில்லை. ஆனால் கடந்த 4 - 5 ஆண்டுகளில் ரோகித் சர்மா பல சதங்களை அடித்துவிட்டார். எனக்கு தெரிந்தவரை 20 சதங்களை வரை கடந்த 7 ஆண்டுகளில் அடித்துவிட்டார். எனவே பாண்டிங்கை விட ரோகித் சிறந்தவர் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 12, 2023, 18:45 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+