Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனிமேல் தான் ரோகித்திற்கு பிரச்சினை இருக்கு”.. ஆஸி, உடனான டெஸ்ட் வெற்றி.. கம்பீர் மறைமுக எச்சரிக்கை

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இனிமேல் தான் பெரிய சவால்களே உள்ளன என கம்பீர் கூறியுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே 2- -0 என முன்னிலை பெற்றுவிட்டது.

இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதியும், 4வது டெஸ்ட் போட்டி மார்ச் 9ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுவிட்டன.

ரோகித் கேப்டன்சி

ரோகித் கேப்டன்சி

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டுவிட்டதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி கண்டால் போதும், இறுதிப்போட்டிக்கான இடத்தை இந்தியா உறுதி செய்துவிடும். அங்கும் ஆஸ்திரேலிய அணியை தான் எதிர்கொள்ள வேண்டும்.

 டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் ஐசிசி கோப்பையை வெல்லாமல் உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் சீசனிலேயே வெல்ல வாய்ப்பு இருந்தது. விராட் கோலியின் கேப்டன்சியில் அசால்ட்டாக இறுதி சுற்று வரை சென்ற இந்திய அணி நியூசிலாந்திடம் துரதிஷ்டவசமாக தோற்றது. எனவே கோலியை விட சிறப்பாக கேப்டன்சி செய்து ரோகித்தாவது வெற்றியை தேடிக்கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கம்பீர் விளக்கம்

கம்பீர் விளக்கம்

இந்நிலையில் ரோகித் கேப்டன்சி குறித்து கம்பீர் பேசியுள்ளார். அதில், விராட் கோலி - ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு எந்தவித வித்தியாசமுமே இல்லை. கோலியின் திட்டங்களை தான் ரோகித் தற்போது செயல்படுத்தி வருகிறார். ஆனால் இது இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக இருக்கும். ரோகித் சர்மாவிற்கான உண்மையான சவால்களே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளன.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா களங்களில் தான் விராட் கோலிக்கு அதிக பிரச்சினைகள் இருந்துள்ளன. எனவே ரோகித்திற்கும் அதே சவால்கள் இருக்கும். ரோகித் தற்போது பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர், சிராஜ், ஷமி ஆகியோரை அதிகம் பயன்படுத்துகிறார். இவர்களை வெற்றிகரமானவர்களாக மாற்றியது கோலி தான். எனவே இருவரும் ஒரே மாதிரியான கேப்டன்கள் தான். அயல்நாடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓவல் மைதானம்

ஓவல் மைதானம்

ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டுவிட்டால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும். இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தான் நடைபெறும் எனத் தெரிகிறது. இங்கு ஆஸ்திரேலிய அணியை தான் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் கம்பீர் விடுத்த எச்சரிக்கையை ரோகித் சரிசெய்வாரா என பார்ப்போம்.

Story first published: Monday, February 20, 2023, 14:29 [IST]
Other articles published on Feb 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+