Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சஞ்சு-லாம் ஒரு ஆளே இல்லை.. ரோஹித் சர்மாவையே நீக்கியவர்".. வைபவ் அறிமுகத்தில் கம்பீர் எடுத்த முடிவு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஆடும் லெவனில் சேர்த்ததற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் குறித்துப் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் நேரடி விருப்பமே இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கிரிக்பிளாகர் என்ற தளத்திடம் பேசிய பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த நபர், "டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போதே ரோஹித் சர்மாவை ஆடும் லெவனில் இருந்து கௌதம் கம்பீரால் நீக்க முடியும் என்றால், சஞ்சு சாம்சன் எல்லாம் அவருக்கு எம்மாத்திரம்? உலகக்கோப்பையை வென்று கொடுத்த பிறகு சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விதமே, தற்போதைய கம்பீரின் ஆட்சியில் யாருடைய இடத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்ற செய்தியைச் சொல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Gautam Gambhir Ruthless Selection Policy Exposed From Rohit Sharma to Sanju Samson No Player is Safe

2025-26 இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். ரோஹித் தாமாக விலகியதாக சொன்னாலும் அதன் பின்னணியில் கம்பீர் இருந்ததாக அப்போது பேசப்பட்டது.

அதேபோல, சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிக்கான தகுதியான நபர் என்று கம்பீர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 2026 டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்த சஞ்சு சாம்சனை, மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக கம்பீர் உடனடியாக அணியிலிருந்து தூக்கியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பீரின் இந்த அதிரடி முடிவுகள் சாம்சனுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உலகக்கோப்பையை முன்னிட்டு சுப்மன் கில்லை டி20 அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் விரும்பிய போதிலும், கம்பீர் அதற்கு ஆதரவளிக்காததால் கில் நீக்கப்பட்டார். இதேபோல், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் ஆர்வம் காட்டினாலும், கம்பீர் அதற்குத் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். கம்பீரின் விருப்பமின்மையே தனது நீக்கத்திற்கு காரணம் என்று ஷமியும் கருதுவதாகத் தெரிகிறது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம், இந்திய கிரிக்கெட்டில் தற்போது கௌதம் கம்பீரின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது என்பதும், அவரது முடிவே இறுதியானது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

Story first published: Tuesday, July 7, 2026, 11:55 [IST]
Other articles published on Jul 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+