மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த இரண்டு ஜாம்பவான்களையும் கம்பீர் தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோலி, ரோகித் சர்மாவை கம்பீர் தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் கோலி, கம்பீர உடன் பேசுவது கிடையாது என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது இருக்கும் அணியில் உள்ள வீரர்களை விட ஆயிரம் மடங்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா திறமை வாய்ந்தவர்கள். எனவே ரோகித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த இரண்டு ஜாம்பவான்களையும் கம்பீர் தடுக்கக்கூடாது.கம்பீர் தற்போது நீங்கள் பயிற்சியாளராக இருக்கிறீர்கள். நீங்கள் யாரையும் தடுக்கக்கூடாது.அதுவும் ரோகித் சர்மாவையும்,விராட் கோலியையும் கண்டிப்பாக தடுத்து நிறுத்தாதீர்கள். இருவரும் அபாரமான ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இருவரும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் விளையாடட்டும்.
அதை தடுக்க வேண்டாம் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் வலியுறுத்தி வந்தனர். முதலில் இதை ஏற்காத விராட் கோலி, தேர்வுக்குழு உறுப்பினர் பிரக்யான் ஒஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தான் பங்கேற்க முடிவெடுத்து இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் ஒரு நாள் போட்டி இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.