Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருவில் யார் வேண்டுமானாலும் ரன் அடிக்கலாம்.. டிவில்லியர்ஸ் ஒன்னும் கிடையாது..கம்பீர் விமர்சனம்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எப்போதுமே பிரபலமாக இருக்கும் வீரர்களை விமர்சித்து பேசுவதில் பெயர் போனவர்.

விளையாடும் காலத்தில் கம்பிருக்கும் தோனிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது. எனினும் ஓய்வு பெற்ற பிறகு தோனியை மறைமுகமாக தாக்கி பேசுவதிலேயே தொழிலாக கம்பீர் வைத்திருந்தார்.

அதன் பிறகு, விராட் கோலி கடுமையாக தாக்கி பேசினார். தற்போது அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ்.

360 டிகிரி வீரர்

360 டிகிரி வீரர்

கால்பந்துக்கு மெஸ்ஸி எப்படியோ கிரிக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் என்று ரசிகர்கள் அவரை 360 டிகிரி பிளேயர் என்று புகழ்ந்து வருவார்கள். காரணம் பந்தை நீங்கள் எப்படி போட்டாலும் மைதானத்தில் உள்ள எந்த திசையிலும் அடிக்கக்கூடிய திறமையை டிவில்லியர்ஸ் படைத்திருந்தார். அதிவேகமாக 150 ரன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை டிவில்லியர்ஸ் படைத்திருக்கிறார்.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகள் நடந்து முடிவடைந்த நிலையில் , சிறந்த வீரர்கள் யார் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கம்பீர், டிவில்லியர்ஸ் சிறந்த வீரர் என்று சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார். தொடர்ந்து பேசிய அவர் டிவில்லியர்ஸ் ,ஐபிஎல் தொடரில் மட்டும் தான் தனிப்பட்ட அளவில் ரெக்கார்டுகளை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

சின்னசாமி மைதானத்தில் யார் வேண்டுமானாலும் ரன் அடிக்கலாம் என்றும் கம்பீர் விமர்சனம் செய்தார். கம்பீரின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உடனே ரசிகர்கள் அப்போது நீங்களும் தானே கொல்கத்தா அணிக்காக பெங்களூருவில் 11 முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அடித்தது வெறும் 302 ரன்கள் தானே என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

 ஐபிஎல் ரெக்கார்ட்

ஐபிஎல் ரெக்கார்ட்

அதேசமயம் பெங்களூருவில் 61 டி20 போட்டிகளில் விளையாடிய டிவில்லியர்ஸ் 1960 ரன்கள் அடித்திருப்பதாகவும், சராசரியாக 43 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் 161 என்ற அளவில் இருப்பதாகவும் விமர்சித்து இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் 170 போட்டிகளில் விளையாடி 516 ரன்கள் டிவில்லியர்ஸ் அடித்திருக்கிறார்.ஐபிஎல் தொடரில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை டிவில்லியர்ஸ் வைத்திருக்கிறார். இந்த நிலையில் கம்பீரின் இந்த விமர்சனம் ரசிகர்களை சாக்காக்கி உள்ளது.

Story first published: Saturday, March 4, 2023, 18:55 [IST]
Other articles published on Mar 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+