For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது எல்லாம் என்ன நியாயம்.. ஏன் இப்படி பாகுபாடு பாக்குறீங்க.. இந்திய அணியை வெளுத்து வாங்கிய கம்பீர்

திருவனந்தபுரம் : இந்திய அணி நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்வதில் பாகுபாடு பார்ப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த கவுதம் கம்பீர் பேட்ஸ்மன்களுக்கு ஒரு நியாயமும் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நியாயமும் இந்திய அணி நிர்வாகம் செய்வதாக புகார் அளித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும், சாகலும் இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இருவருக்கும் பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

காயம் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களின் ஆதிக்கத்தால் இவ்விருவரும் வந்த வேகத்திலேயே அணியை விட்டு சென்றார்கள். தற்போது இது குறித்து தான் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது இந்திய அணியில் பந்துவீச்சாளர்களுக்கு ஏதேனும் ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த போட்டியில் அவர்கள் அதிரடியாக நீக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து வாய்ப்பு ஏன்?

தொடர்ந்து வாய்ப்பு ஏன்?

ஆனால் பேட்ஸ்மேன்கள் மட்டும் தொடர்ந்து மோசமாக விளையாடினாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயம் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நியாயம் என்பது சரியா? சாகல் , குல்தீப் யாதவ் ஆகியோர் ஏதோ ஒரு தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவர்களை அதன் பிறகு அணியில் சேர்க்கவே இல்லை. அப்போது ஏன் இந்த நடைமுறையை நீங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடைப்பிடிப்பதில்லை.

தொடரும் அநியாயம்

தொடரும் அநியாயம்

அஸ்வின், ஜடேஜா, சாஹல் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து அநியாயம் தான் செய்யப்பட்டு வருகிறது. குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். பந்துவீச்சாளர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் சரியாக விளையாடாமல் போகலாம். அதற்காக அவர்களை நீக்குவது சரியல்ல.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் சூரிய குமாருக்கு தற்போது கடைசி போட்டியில் சேர்த்திருக்கிறார்கள். இது நிச்சயம் நல்ல விஷயம். வாசிங்டன் சுந்தர் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். முகமது சமிக்கு வயதாகி விட்டு வருகிறது. இதனால் அவருக்கு ஓய்வு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இளம் வீரர் உம்ரான் மாலிக் க்கு ஓய்வு வழங்கியிருக்கிறார்கள். இது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை என்று கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, January 15, 2023, 14:50 [IST]
Other articles published on Jan 15, 2023
English summary
Gautam Gambhir slams Indian team for showing partiality to the bowlers இது எல்லாம் என்ன நியாயம்.. ஏன் இப்படி பாகுபாடு பாக்குறீங்க.. இந்திய அணியை வெளுத்து வாங்கிய கம்பீர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+