ஷாரூக் தந்த ஆதரவு தான் எங்கள் வெற்றிக்குக் காரணம்... நன்றி சொன்ன காம்பீர்
கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் ஒழுங்காக விளையாடாமல் பல முறை ஆட்டமிழந்த போதும் தொடர்ந்து உற்சாகப் படுத்திய ஷாருக்கானிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் கொல்கத்தா அணியின் கேப்டனான காம்பீர்.
கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல் குவாலிபையர் சுற்றில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி பலமான பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அப்போது செய்தியாளர்களிடம் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் பேசினார்.

அதில் அவர் கூறியதாவது :-
இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முழு காரணமும் எங்கள் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தான். அவர் தான் எங்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் தந்து எங்களை வழி நடத்தினார். இத்தொடரின் தொடக்கத்தில் நான் ஒழுங்காக விளையாடாமல் பல முறை ஆட்டமிழந்த போது ஷாருக்கான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications