
தோல்விக்கான காரணங்கள்
கடந்த சீசனில் ப்ளே -ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் 7வது இடத்தில் தொடரிலிருந்து வெளியேறியது. கடந்த தொடரில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது, கொரோனாவால் சிஎஸ்கே வீரர்கள் பாதிப்பிற்கு உள்ளானது ஆகியவை அந்த அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.

சிறப்பான வெற்றி
இந்நிலையில் இந்த சீசனில் சிறப்பான வெற்றியை அளிக்க சிஎஸ்கே முனைப்பு காட்டுகிறது. அணயில் மீண்டும் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார். மொயின் அலி, கௌதம் போன்ற இணைப்புகள் அணிக்கு பலத்தை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளே-ஆப் சுற்று கடினம்
ஆயினும் இந்த சீசனிலும் அந்த அணி ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறுவது கடினம் என்று முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, மஞ்ச்ரேகர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் சிஎஸ்கே சற்றே தங்களை மேம்படுத்தியுள்ளது என்ற போதிலும் வெற்றிக்கு இது போதுமானதல்ல என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

5வது இடத்தில் முடிக்கும்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர், இந்த தொடரை சிஎஸ்கே 5வது இடத்தில் முடிக்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் மிகவும் மோசமான இடத்தில் தொடரை முடித்துள்ள சிஎஸ்கே இந்த சீசனில் ஏலத்தின்போது சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராட்டு தெரிவித்த கம்பீர்
ஆரம்பத்தில் க்ளென் மாக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க முயற்சித்த சிஎஸ்கே, பின்பு அதிலிருந்து விலகி, கே கௌதம் மற்றும் மொயீன் அலியை ஏலத்தில் எடுத்தது சரியான முடிவு என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு வீரரை வாங்க வேண்டிய தொகைக்கு இரு வீரர்களை எடுத்தது சிறப்பானது என்றும் கூறியுள்ளார். இந்த ஏலமே சிஎஸ்கே சிறப்பான செயல்பட்ட ஏலம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications