Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்

அகமதாபாத்: அக்‌ஷரின் ஆட்டத்தை பார்த்த பிறகு ஜடேஜாவின் மனநிலை எப்படி இருக்கும் என கவாஸ்கர் கிண்டல் அடித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை மோதிய 3 போட்டிகளிலுமே ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக இதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அக்‌ஷர் பட்டேலின் ஆட்டத்திற்கு பிறகு தனது கட்டை விரல் காயம் ஏன் இன்னும் சரியாக வில்லை என ஜடேஜா யோசிப்பார் என கவாஸ்கர் கிண்டலடித்துள்ளார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு உதாரணமாக இங்கிலாந்து அணியில் பார்ட் டைம் ஸ்பின்னராக களமிறங்கிய ஜோ ரூட் 5 விக்கெட்கள் எடுத்தார்.

 ஜடேஜா விலகல்

ஜடேஜா விலகல்

இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருந்த ஜடேஜா, கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 3வது டெஸ்டில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற சென்றார். கட்டை விரலில் அவருக்கு ஏற்பட்ட முறிவு சரியாகாததன் காரணமாக இங்கிலாந்து தொடரிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டனர்.

கிண்டல்

கிண்டல்

முன்னாள் வீரர் கவாஸ்கரிடம் அக்‌ஷரின் அபார ஆட்டத்திற்கு பிறகு ஜடேஜாவுக்கான வாய்ப்பு எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அக்‌ஷரின் ஆட்டத்திற்கு பிறகு ஜடேஜா தனக்கு ஏன் இன்னும் கட்டை விரல் காயம் சரியாகவில்லை என யோசிப்பார். ஜடேஜாவுக்கு ஜன.10ம் தேதி காயம் ஏற்பட்டது, ஆனால் பிப் முடிந்தும் சரியாகவில்லை. என கிண்டல் அடித்தார்.

 அக்‌ஷர் விலக வேண்டும்

அக்‌ஷர் விலக வேண்டும்

இது குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் க்ரீம் ஸ்வான், நான் ஜடேஜாவின் பெரிய ரசிகன். ஜடேஜா அணிக்குள் வரவேண்டும். அவர் சிறப்பாக செயல்பட்டாலும் சரி இல்லையென்றாலும் சரி, அக்‌ஷர் விலகி ஜடேஜா அணிக்குள் வர வேண்டும். ஏனென்றால் அக்‌ஷர் இந்தியாவுக்காக இந்த தொடரில் நிறைய செய்துவிட்டார்.

Story first published: Tuesday, March 2, 2021, 21:23 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+