Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 2 விஷயத்தை செய்யுங்கள்.. சுழலுக்கு ஏற்ற பிச்சில் எப்படி ஆட வேண்டும்.. கவாஸ்கர் அட்வைஸ்

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என இந்திய வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள மூன்று போட்டிகளில் 2-1 என இந்தியா வகிக்கிறது.

எனவே தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா நடைபெற உள்ளதுர மைதானத்தில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியாவின் தவறு

இந்தியாவின் தவறு

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தான் பிச்சுகள் அமைந்திருந்தன. குறிப்பாக மூன்றாவது போட்டியில் ஏக போகத்திற்கு ஸ்பின்னானதால் இந்திய வீரர்கள் தடுமாறினர். எனவே அடுத்த போட்டியில் தவறுகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

கவாஸ்கர் அறிவுரை

கவாஸ்கர் அறிவுரை

இந்நிலையில் அகமதாபாத் பிச்சில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சுழலுக்கு ஏற்ற களத்தில் வீட்டிற்கு மேல் உள்ள கையை திசைக்காக பயன்படுத்த வேண்டும். கீழே உள்ள கை வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். கைகளை மிகவும் லேசாக வைத்திருக்க வேண்டும் அப்போதுதான் சரியாக திசை திருப்ப முடியும்.

பவுன்சர் பந்துகள்

பவுன்சர் பந்துகள்

சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தபடியாக பவுன்சர் பந்துகளுக்கு தான் சிரமம் அதிகம் இருக்கும். அதனை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் சற்று குனிந்த வாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் காலை முன்னோக்கி வைத்து விளையாடலாமா பின்னால் வைத்து விளையாடலாமா என்ற குழப்பம் இருக்காது. தந்தை தெளிவாக பார்த்த விளையாட முடியும் எனக்கு கவாஸ்கர் கூறியுள்ளார்.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

அகமதாபாத் மைதானத்தின் பிச்சில் ஓரளவுக்கு வேகப்பந்து வீச்சும் எடுபடும் என தெரிகிறது. எனினும் இந்திய அணி ஸ்பின்னர்களுக்கு ஏற்ற பிட்ச் உருவாக்கவே ஆலோசித்து வருகின்றனர். ஏனென்றால் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 7, 2023, 18:27 [IST]
Other articles published on Mar 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+