Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விவியன் ரிச்சர்ட்ஸ், சேவாக் மாதிரி ரோஹித்தும் ஜாம்பவானாக மாற ஐடியா சொல்லும் கவாஸ்கர்

மும்பை : ரோஹித் சர்மா எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேன் ஆக மாற அதிக வாய்ப்புள்ளது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் ஆடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

முக்கியத்துவம் அற்ற மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை புரிய வாய்ப்புள்ளது. இரண்டாவது டி20யில் தன் நான்காவது டி20 போட்டி சதத்தை அடித்து சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் செய்யும் சாதனைகள்

ரோஹித் செய்யும் சாதனைகள்

இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மா குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். சமீப காலமாக இந்திய அணியில் விராட் கோலி ஏராளமான சாதனைகள் குவித்து வருவது போல ரோஹித் தன் அதிரடி ஆட்டத்தால் சாதனைகள் செய்து வருகிறார்.

அச்சுறுத்தும் வீரராக ரோஹித் மாறலாம்

அச்சுறுத்தும் வீரராக ரோஹித் மாறலாம்

ரோஹித் சர்மா தற்போது இருக்கும் பார்மை வைத்து பார்த்தால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள், டி20 போல அதிரடியாக ஆடினால், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்திய அணியில் அதிரடி வீரராக வலம் வந்த சேவாக் ஆகியோருக்கு இணையாக எதிரணிகளை அச்சுறுத்தும் வீரராக மாறலாம் என குறிப்பிட்டார்.

பெரிய சதங்கள் அடிக்கும் ரோஹித்

பெரிய சதங்கள் அடிக்கும் ரோஹித்

மேலும் கவாஸ்கர் கூறுகையில், "ரோஹித் தனக்கு முன்னால் இருந்த சேவாக் போலவே பெரிய சதங்களை அடிப்பதில் பசியோடு இருக்கிறார்" என குறிப்பிட்டார். ரோஹித் தற்போது ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமையோடு இருக்கிறார். இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை.

சிக்ஸ் அடிப்பதில் ரோஹித் கில்லி

சிக்ஸ் அடிப்பதில் ரோஹித் கில்லி

அதே போல, சிக்ஸர் அடிப்பதிலும் ரோஹித் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு முன்னே அப்ரிடி மற்றும் கெயில் மட்டுமே உள்ளனர். மேலும்., டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்து அதிக சதம் அடித்தவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நீண்ட காலம் கழித்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ரோஹித், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளார். அதிலும் அதிரடி காட்டுவாரா?

Story first published: Sunday, November 11, 2018, 15:00 [IST]
Other articles published on Nov 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+