Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவாஸ்கருக்கு மட்டும் ஏன் கடவுள் 2 வாய் வச்சிருக்காரு...??

மும்பை: சுனிஸ் கவாஸ்கரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. செளராஷ்டிரா பிராந்தியத்தில் போடப்படும் பிட்ச்சுகள் மகா மட்டமானவை, செட்டப் செய்யப்பட்டவை என்று அவர் விமர்சித்துள்ளார். இதற்கு செளராஷ்டிர கிரிக்கெட் சங்க நிர்வாகியான நிரஞ்சன் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஆட்டக்காரர்களுக்குச் சாதகமாக இதுபோன்ற செட்டப் பிட்ச்சுகள் போடப்படுவது கண்டனத்துக்குரியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தவறு என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இங்குதான் நமக்கு ஒரு விஷயம் விளங்கவில்லை. காரணம், இந்திய அணிக்கு ஏற்றார் போல பிட்ச் போடவில்லை என்று மும்பை மைதான கியூரேட்டரிடம் நாக்கு தடித்து தாறுமாறாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய ரவி சாஸ்திரிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் கவாஸ்கர். இப்போது செளராஷ்டிர அணி தனக்கு சாதமாக பிட்ச் போட்டு விளையாடியதைக அவர் கடுமையாக கண்டித்துள்ளதுதான் முரண்பாடாக உள்ளது.

ரஞ்சி போட்டி

ரஞ்சி போட்டி

ரஞ்சி போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் செளராஷ்டிரா பகுதியில் நடந்து வரும் போட்டிகளால்தான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. செளராஷ்டிரா அணி தனது ஹோம் பிட்ச்சில் மோதிய 3 போட்டிகளும் 2 நாட்களிலேயே முடிந்துள்ளன.

விக்கெட்களை அள்ளும் ஜடேஜா

விக்கெட்களை அள்ளும் ஜடேஜா

மேலும் செளராஷ்டிரா அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா பயங்கரமாக விக்கெட்களை அள்ளியுள்ளார். 3 போட்டிகளில் 37 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். இதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்படிப்பா இப்படி

எப்படிப்பா இப்படி

ஒருபக்கம் ஜடேஜா விக்கெட்களை அள்ளிக் குவிக்கிறார். போட்டி 2 நாளிலேயே முடிந்து விடுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை ஆறு முறை 5 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் ஜடேஜா. இதைப் பார்த்து அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

டவுட் கிளப்பும் கவாஸ்கர்

டவுட் கிளப்பும் கவாஸ்கர்

இதைத்தான் தற்போது கவாஸ்கர் செட்டப் பிட்ச் போட்டு ஆடுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், சவுராஷ்டிர அணி தான் ஆடிய 3 ரஞ்சிப் போட்டிகளை தலா 2 நாட்களில் முடித்துள்ளது. ஜடேஜா ஓப்பனிங்கில் பந்து வீசுகிறார். அத்தனை விக்கெட்களையும் அள்ளுகிறார்.

சோதனை நடத்துங்க

சோதனை நடத்துங்க

ஒரு அணி 600 அல்லது 700 ரன்களைக் குவிக்கிறது என்றால் உடனடியாக அங்கு இன்ஸ்பெக்டரை அனுப்பி சோதனையிட வேண்டும். பிட்ச்ச்சைப் பரிசோதிக்க வேண்டும். நெகட்டிவ் ரிப்போர்ட் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புள்ளிகளைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செட்டப் பிட்ச்சை யாரும் போட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

நிரஞ்சன் ஷா கோபம்

நிரஞ்சன் ஷா கோபம்

ஆனால் கவாஸ்கரின் பேச்சு பொறுப்பில்லாதது என்று நிரஞ்சன் ஷா கண்டித்துள்ளார். இவர் பிசிசிஐயில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். செளராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் கெளரவச் செயலாளராக இருப்பவர். இவர் கூறுகையில், கவாஸ்கர் செய்துள்ள சாதனைகளுக்காக அவரை மதிக்கிறேன். ஆனால் அதற்காக அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச முடியாது. எப்படி அவர் இப்படிக் கூறலாம். அவரது பேச்சு பொறுப்பற்றது என்றார் ஷா.

டபுள் ஸ்பீச்

டபுள் ஸ்பீச்

ஆனால் கவாஸ்கரும் டபுளாகத்தான் பேசுகிறார். ரவி சாஸ்திரி, மும்பை கியூரேட்டரை விமர்சித்த விவகாரத்தில் அவர் சாஸ்திரிக்கு சாதகமாகத்தான் கருத்து கூறினார். அப்போது கவாஸ்கர் கூறுகையில், நினைத்த பிட்ச் கிடைக்காவிட்டால் ஹோம் டீமுக்கு கோபம் வரத்தான் செய்யும். வார்த்தை தடிக்கத்தான் செய்யும். பேசத்தான் செய்வார்கள். அதைத்தான் சாஸ்திரியும் செய்துள்ளார். இருந்தாலும் பேசும் வார்த்தை என்ன என்பதை நாம் உணர வேண்டும். கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கவாஸ்கர்.

ஆனா இப்ப இப்படிப் பேசுகிறாரே

ஆனா இப்ப இப்படிப் பேசுகிறாரே

இப்போது செளராஷ்டிர அணி தனது உள்ளூர் போட்டிகளில் தனக்கு சாதகமாக பிட்ச் போட்டு விளையாடுகிறது. ஆனால் இதைக் கடுமையாக கண்டித்துள்ளார் கவாஸ்கர்.

ஏன், இப்படி கவாஸ்கர் டபுள் டபுளா பேசுகிறார்..!

Story first published: Friday, October 30, 2015, 11:50 [IST]
Other articles published on Oct 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+