புதிய ஐபிஎல் ஆணையர் சிரயு அமீனுக்கு உதவியாக கவாஸ்கர், ரவி சாஸ்திரி, பட்டோடி அடங்கிய குழு
மும்பை: புதிய ஐபிஎல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிரயு அமீனுக்கு உதவியாக 3 பேர் கொண்ட குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இந்தக் குழுவில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், தனியாக ஐபிஎல் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. மாறாக நான்காவது ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்த இடைக்கால ஆணையருக்கு உதவியாக கவாஸ்கர், சாஸ்திரி, பட்டோடி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று முன்னாள் வீரர்களும் ஐபிஎல் அணிகளுடன் பேசி நான்காவது போட்டித் தொடரை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications