Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் 3வது இடத்தில் ஆடக் கூடாது, கோஹ்லிக்குத்தான் அது சரிப்படும்.. கவாஸ்கர்

டெல்லி: 3வது இடத்தில் விளையாட கேப்டன் கோஹ்லிதான் சரியான ஆள். ரோஹித் சர்மாவுக்கு அது சரிப்படாது என்று சுனிஸ் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் தொடங்கியுள்ள நிலையில் இந்த யோசனையைக் கூறியுள்ளார் கவாஸ்கர்.

இந்த டெஸ்ட் போட்டியில் 3வது இடத்தில் ரோஹித் சர்மாவை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை விமர்சித்துள்ளார் கவாஸ்கர். இது சரியாக வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

புஜாரா இடத்தில் ரோஹித்

புஜாரா இடத்தில் ரோஹித்

இலங்கைக்குக் கிளம்புவதற்கு முன்பே முக்கியமான 3வது இடத்தில் சட்டேஸ்வர் புஜாராவுக்குப் பதில் ரோஹித் சர்மாவை ஆட வைக்க யோசித்து வருவதாக கேப்டன் கோஹ்லி கூறியிருந்தார். இது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

கோஹ்லிக்குத்தான் சரிப்படும்

கோஹ்லிக்குத்தான் சரிப்படும்

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ரோஹித் நல்ல சாய்ஸ்தான். ஆனால் அவரை விட விராத் கோஹ்லிக்கே 3வது இடம் சரிப்படும். அந்த இடத்தை தான் எடுத்துக் கொள்வதே கோஹ்லிக்கு நல்லது.

அடித்து ஆட வேண்டும்

அடித்து ஆட வேண்டும்

முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெல்லும் நோக்குடன் இந்தியா அதிரடியாக ஆட வேண்டும். அப்போதுதான் தொடரை வெல்லும் உத்வேகம் கிடைக்கும். உற்சாகமாக ஆட முடியும்.

தோத்துடாதீங்க

தோத்துடாதீங்க

முதல் போட்டியில் எக்காரணம் கொண்டும் இந்திய அணி தோல்வியடைந்து தவிடக் கூடாது. தோற்றால் பிறகு தேறி வருவது கஷ்டம். ஆஷஸ் தொடரைப் பாருங்கள். ஆஸ்திரேலியா தொடரை இழக்க இதுதான் காரணமாக அமைந்தது.

இலங்கை ஆக்ரோஷமானது

இலங்கை ஆக்ரோஷமானது

இலங்கை அணி ஆக்ரோஷமான வீரர்கள் நிரம்பியது. எனவே அவர்கள் மீது அழுத்தத்தை மேலும் அதிகரித்து அதில் ஆதாயம் அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

சங்கக்கராவுக்காக ஆடுவார்கள்

சங்கக்கராவுக்காக ஆடுவார்கள்

சங்கக்கரா ஓய்வு பெறவுள்ளார். எனவே அவருக்குப் பொருத்தமான பரிசளிக்கும் வகையில் ஆக்ரோஷமாக இலங்கை வீரர்கள் ஆடுவார்கள். எனவே இந்திய வீரர்கள் அதைச் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றார் கவாஸ்கர்.

Story first published: Wednesday, August 12, 2015, 11:20 [IST]
Other articles published on Aug 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+